பத்து கிலோ கஞ்சா பறிமுதல்

On Tue, Nov 10, 2020, 14:27 Ravi Chandran <tmlravi> wrote:

*மதுரையில் கஞ்சா சேல்ஸ் ஏஜென்டுகள் இருவர் கைது-10 கிலோ கஞ்சா பறிமுதல்.*

மதுரை கரடிக்கல் பகுதியைச் சேர்ந்த சுந்தர் என்பவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில்அங்கு விரைந்து சென்ற ஆஸ்டின்பட்டி போலீசார் சுந்தரத்தை கைது செய்து அவரிடமிருந்து 450 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர் .

விசாரணையில் திண்டுக்கல்லை சேர்ந்தவர்களிடம் கஞ்சாவை வாங்கி விற்பனை செய்வதாக கூறப்படுகிறது.

எனவே திருமங்கலம் டிஎஸ்பி வினோதினி உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து சுந்தரிடம் கஞ்சா விற்பனைக்கு கொடுக்க வந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த ராஜ்குமார், அஜித் ஆகிய இருவரையும் சம்பவ இடத்திலேயே மடக்கிப் பிடித்தனர்.

அவர்களிடம் இருந்து கஞ்சா விற்பனைக்காக கொடுக்க வந்த 10 கிலோ கஞ்சா, இருவர் பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: