கண்காணிப்பு மையம் திறப்பு..

புதுகையில் மக்கள் கூட்டத்தை
கண்காணிக்க, கண்காணிப்பு
மையம் எஸ்.பி பாலாஜி சரவணன்
திறந்தார்.
புதுக்கோட்டை நவ10- புதுகை
நகரில் தீபாவளி பண்டிகையை
யோட்டி கீழராஜவீதியில் மக்கள்
கூட்டம் அதிகமாக உள்ளது.
இதேபோல் கீழ2ம்வீதி,தெற்கு
2,3ம்வீதிகளிலும்தெற்கு ராஜவீதி,லடக்குராஜவீதியிலும்
மக்கள் கூட்டம் அதிகமாக
உள்ளது. கொரேனா பரவலை
தடுக்கவும், தனிநபர் இடைவெளியை கடைப்பிடிப்பதை
கண்காணிக்கவும் காவல்துறை
சார்பில் சிசிடிவிகாமிரா23இடங்களில்பொருத்தப்பட்டு கண்காணிப்பு மையம்
கீழராஜவீதி காதிகிராப்ட் எதிரில்
திறக்கப்பட்டுள்ளது.இதனை
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
முனைவர் லோக.பாலாஜி
சரவணன் திறந்துவைத்தார்.
முன்னதாக புதியபஸ்நிலையத்தில் தலைக்கவசம்அணியவேண்டிய
தின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணியையும் துவக்கிவைத்தார். நிகழ்வில் துணைகண்காணிப்பாளர்
செந்தில்குமார்,நகர காவல்
ஆய்வாளர் செல்வி,
உதவி ஆய்வாளர் பிரகாஷ் ஆகியோர்கள் பங்கேற்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: