பேக்கரிகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள ் ஆய்வு…

புதுக்கோட்டையில் பேக்கரி கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள்ஆய்வு.

புதுக்கோட்டை : உணவு பாதுகாப்பு துறை சார்பாக புதுக்கோட்டையில் இனிப்பு மற்றும் பேக்கரி கடைகள் சுமார் 14 கடைகள்திடீர் ஆய்வு செய்யபட்டது.
ஸ்டால்கள் மற்றும் பாக்கெட்டுகளில் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி குறிப்பிடாத 10 இனிப்பு மற்றும் பேக்கரி கடைகள் மீது உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின் படி பிரிவு 55 நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 3 சட்டபூர்வமான உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு உணவு பகுப்பாய்வுக்கு அனுப்பபட்டுள்ளது.
மேலும் பிரிவு 55 நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ள கடைகள் இரண்டு நாட்களில் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி குறிப்பிடப்படாமல் இனிப்பு மற்றும் பேக்கரி வகைகள் விற்பனைக்கு வைக்கபட்டு இருந்தால் உணவு பாதுகாப்பு துறை தர நிர்ணய சட்டம் 2006 ன் படி வழக்கு தொடரப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ஆர்.ரமேஷ்பாபு தெரிவித்தார்.
இந்த ஆய்வில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கார்த்தி சிவக்குமார் மற்றும் விஜயக்குமார் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: