தமிழக முதல்வர் பம்பரம் போல சுழன்று பணியா ற்றுகிறார்…அமைச்சர்

தமிழக முதல்வர் பம்பரம் சுழலன்று செயலாற்றுகிறார்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

மதுரை

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பம்பரம் போல சுழன்று தமிழக மக்களுக்காக செயலாற்றி வருகிறார் என, தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
மதுரை கிழக்குத் தொகுதி முன்னாள் எம்எல்ஏ தமிழரசன் மகள் திருமணத்தை விசாரிக்க வந்து விட்டு நிருபர்களிடம் மதுரையில் அவர் பேசியது:

தமிழக முதல்வர் எடப்பாடியார் மாவட்டங்கள் தோறும் நேரில் சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறார். மக்களின் தேவைகளை அறிந்து அதிமுக அரசு திட்டம் தீட்டி வருகிறது.
விருதுநகர் மாவட்டத்துக்கு வருகை தரவுள்ள தமிழக முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும்.
அதிமுக அரசு எந்த நல்ல திட்டங்களை மக்கள் நலன் கருதி செயல்படுத்தினால், அதை திமுக தலைவர் குறை சொல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அதிமுகவை பொறுத்தமட்டில், தமிழக முதல்வரும், துணை முதல்வரும் இணைந்து பல்வேறு நலத்திட்டங்களை, மக்களுக்கு அளித்து வருகின்றனர் என்றார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: