நீட் தேர்வு பயிற்சி…அமைச்சர்

நவம்பர் 9ம் தேதி நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்

பள்ளி திறப்பு குறித்து முதல்வர் முடிவெடுப்பார்

ஸ்டாலின் கேள்விக்கெல்லாம் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளிப்பார் என அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.

மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள 450 தனியார் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கும் நிகழ்வு மதுரை விரகனூரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது,

இவ்விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மதுரை ஆட்சியர் அன்பழகன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர், விழாவில் தனியார் பள்ளிகளுக்கு 2 ஆண்டுகளுக்கான தொடர் அங்கீகார ஆணையை 450 பள்ளிகளுக்கு அமைச்சர்கள் வழங்கினார்கள்,

பின்னர் விழாவில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில் "இந்தியா முழுதும் 50 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்ட சூலலில் ஜெயலலிதா போராடி தமிழகத்திற்கு 69 சதவீத இட ஒதுக்கீடு பெற்று தந்தார், தனியார் பள்ளிகளும் கல்வி சேவையாற்ற வேண்டும் என அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, தமிழக அரசு கொரைனா தொற்றில் மக்களை காப்பாற்றி வருகிறது" பேசினார்,

பின்னர் விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு பேசுகையில் "நாட்டின் வளர்ச்சிக்கு கல்வி மிக அவசியம் என கூறியவர் அப்துல் கலாம், முதல்வர் மீது வீசப்படும் பந்துகளை முதல்வர் சிக்ஸர் அடித்து வருகிறார், கொரைனா காலகட்டத்தில் உலமே விழி பிதுங்கி நிற்க்கும் சூழ்நிலையில் தமிழக முதல்வர் சிறப்பாக நடவடிக்கை எடுத்து வருகிறார்" என பேசினார்,

விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசுகையில் "துண்டு ஏந்தியாவது சத்துணவு திட்டத்தை நிறைவேற்றுவேன் என சொன்னவர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவால் அரசுப்பள்ளி மாணவர்கள் கல்வி பயில இலவச மடிக்கணினி வழங்கப்பட்டது, தமிழகத்தில் இலவசமாக 58 இலட்சத்து 48 ஆயிரம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது, தனியார் பள்ளி நிர்வாகிகள் முன் வந்தால் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க நடவடிக்கை, தமிழகத்தில் தங்கு தடையில்லாமல் கல்வி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது, 303 அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவு நனவாகி உள்ளது, சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தை விட மிக சிறந்த பாடத்திட்டத்தை தமிழக அரசு உருவாக்கி உள்ளது, இதுவரை 15,492 மாணவர்கள் ஆன் லைன் வழியே நீட் தேர்வு பயிற்சி பெற பதிவு செய்துள்ளனர், தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளியில் 7,500 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது, பள்ளிக்கல்வித்துறைக்கு
34,151 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, பதிவு செய்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வரும் 9 ஆம் தேதி முதல் ஆன் லைன் வழியே நீட் பயிற்சி அளிக்கப்படும்" என பேசினார்,

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏசெங்கோட்டையன் கூறுகையில் "இந்திய அளவில் தமிழகத்தில் மட்டுமே கொரோனா தொற்று குறைந்து வருகிறது, அரசை தேடி மக்கள் என்கிற நிலையை மாற்றி மக்களை தேடி தமிழக அரசு செல்கிறது, சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் வரிசையில் முதல்வரின் ஆட்சி காலம் பொற்காலமாக விளங்குகின்றது, அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து முதல்வர் தெளிவாக விளக்கம் அளித்து விட்டார், உள் இட ஒதுக்கீடு வழங்குவதில் சட்டத்தின் படியே நடக்க முடியும், பள்ளிகள் திறப்பதில் முதல்வர் உரிய முடிவு எடுப்பார், பெற்றோர்களின் கருத்தை முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று முடிவு எடுக்கப்படும், கட்டண வசூல் தொடர்பாக தனியார் நீட் பயிற்சி மையங்கள் மீது புகார் அளித்தால் நடவடிக்கை, தனியார் நீட் பயிற்சி மையங்களில் பெற்றோர்களே விரும்பி அதிக பணம் செலவழித்து வருகிறார்கள், பள்ளிகள் திறப்பதற்கு அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது, பாடத்திட்ட சீரமைப்பு குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு சொல்லப்பட்டுள்ளது, பாடத்திட்ட சீரமைப்பு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும், வீட்டில் இருந்தே கல்வி பயிலுவதில் மாணவர்களின் மனநிலை எப்படி உள்ளது என எங்களுக்கு சொல்லுங்கள், மாணவர்களின் மனநிலைக்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என கூறினார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: