அமைச்சர் வீட்டை முற்றுகை..

" அமைச்சர் உதயகுமார் வீட்டை ஆயிரம் இளைஞர்களுடன் கருப்பு கொடியுடன் முற்றுகை போராட்டம் நடத்த போவதாக திமுக வழகறிஞர் இள மகிழன் அறிவிப்பு:

மதுரை

திருப்பரங்குன்றம் அருகே திருநகரில் வழக்கறிஞராக உள்ள இளமகிழன் திமுக தலைமை செயற்குழு உறுப்பினராக உள்ளார் .கடந்த இரண்டு தினங்களுக்கு முன் அமைச்சர் உதயகுமார் திமுக தலைவர் ஸ்டாலின் எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒரு செங்கல் கூட நட்டு வைக்கவிலை என கூறியதற்கு கிண்டலாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இலவச சிகிச்சை பெற அழைத்தார். அரசியல் நாகரிகம் இல்லாமல் எதிர்கட்சி தலைவரை இலவச சிகிட்சை பெற கூறிய அரசியல் கோமாளி அமைச்சர் உதயகுமாரை கண்டித்து திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் இளமையில் தலைமையில் ஆயிரம் இளைஞர்களுடன். அமைச்சர் உதயகுமார் வீட்டை கருப்புக் கொடி முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார். விரைவில் ஆட்சி மாற்றம் வரும் திமுக தலைவர் ஸ்டாலின் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைப்பார். நாவடக்கம் இன்றி பேசும் அமைச்சர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என இளமகிழன் கூறினார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: