விஜயகாந்த் பிரசாரத்துக்கு வருவார்..

விஜயகாந்த் பிரசாரத்திற்கு
வருவார்
பிரேமலதா மதுரையில் தகவல்

மதுரை:

*மதுரை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த்*

மதுரையில் ஒரு திருமணத்திற்காக சென்னையில் இருந்து விமானம் மூலமாக மதுரைவந்த பிரேமலதா விஜயகாந்த் மதுரை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது கூறுகையில்:

வேல் யாத்திரை குறித்த கேள்விக்கு:

பொது மக்களுக்கோ சட்ட ஒழுங்கிற்கோ எந்த ஒரு பிரச்சனை ஏற்பட்டாலும் அரசாங்கம் தன் கடமையை செய்யும். ஆனாலும் இந்தத் தடை குறித்த விளக்கத்தை தமிழக அரசு தெளிவு படுத்திதர வேண்டும்.
தற்போது அரசு சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி அனுமதி மறுத்துள்ளது.

தற்போதுள்ள சூழ்நிலையை நாம் யோசிக்க வேண்டும்
கூட்டணி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு:

ஜனவரி முதல் வாரத்திற்குள் தேமுதிக செயற்குழு கூட்டப்பட்டு தெளிவான முடிவைகேப்டன் அறிவிப்பார்.

விஜயகாந்த் உடல்நிலை குறித்த கேள்விக்கு:

கேப்டன் உடல்நிலை நலமாக உள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் விஜயகாந்தைப் பார்க்கலாம்.

இவ்வாறு கூறினார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: