விவசாய பயிற்சி பட்டறை…

இலவச நாட்டு மாடு கன்றுகள் வழங்கும்விழா மற்றும் விவசாய பயிற்சி பட்டறை துவக்கவிழா:

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மத்திய மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக நம்மவர் கமல்ஹாசன் பிறந்தநாளினை முன்னிட்டு இலவச நாட்டு மாடு கன்றுகள் வழங்கும் விழாவும், விவசாயிகளுக்கான விவசாய பயிற்சி பட்டறை துவக்கவிழாவும் நடைபெற்றது.

இவ்விழாவில் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் ஆர்.சரவணன் தலைமை தாங்கினார். தகவல் தொழில்நுட்பம் சமூக ஊடக மாவட்ட செயலாளர் ஏ.ஹக்கீம், புதுகை ஒன்றிய செயலாளர் ஆர்.சுந்தர், திருமயம் ஒன்றிய செயலாளர் எஸ்.திருமேனி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மாநில விவசாய அணி துணை செயலாளர் ஜெபி.ராஜசேகர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில், வழக்கறிஞர் பிரிவின் மாநில துணை செயலாளர் பொன்.கஜேந்திரன், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு மாநில துணை செயலாளர் கே.செந்தில்குமார் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இதில், மாநில விவசாய அணி துணை செயலாளர் ராஜசேகர் விவசாயிகளுக்கு இலவச நாட்டு மாடு கன்றுகளை வழங்கி, விவசாயிகளுக்கான பயிற்சி பட்டறையினை துவக்கிவைத்து பேசினார்.
முன்னதாக நகரச் செயலாளர் ராஜகோபால் வரவேற்றுபேசினார். நிறைவாக விவசாய அணி மத்திய மாவட்ட செயலாளர் கார்த்திக் மெஸ் மூர்த்தி நன்றி கூறினார்.
விழா ஏற்பாடுகளை ,
ஊடகம் மற்றும் செய்தித்தொடர்பாளர் ஜெய்பார்த்தீபன்உள்ளிட்டோர்
செய்திருந்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: