LatestNews
கிரானைட் தொழிலுக்கு அரசு அனுமதி..
மதுரை மாவட்டத்தில் கிரானைட் தொழிலுக்கு அனுமதி தரவேண்டும் – உரிமையாளர்கள் கோரிக்கை
மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிரானைட் நிறுவனங்கள் தொழில் நடத்த தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் அனுமதி வழங்க வேண்டும் என்று மதுரை மாவட்ட கிரானைட் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மதுரை செய்தியாளர் அரங்கத் தில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த கிரானைட் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் பி.ராஜசேகரன், கடந்த 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி கிரானைட் நிறுவனங்களின் விதிமீறல் என மதுரை மாவட்ட ஆட்சியரால் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதன்பேரில் குற்ற வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.
மதுரை மாவட்டத்தில் அப்போது செயல்பட்டு வந்த 175 கிரானைட் குவாரிகளில் 84 குவாரிகள் மீது வழக்கு தொடுக்கப்பட்டன. இதன் மீதான வழக்கு விசாரணை முடியும் வரை மீதமுள்ள 91 குவாரிகள் இயங்க தடை விதிக்கப்பட்டது. தமிழக அரசின் உத்தரவு காரணமாக இயங்காத 91 குவாரிகளுக்கும் ஏன் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் தொழில் நடைபெறவில்லை என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதற்குரிய விளக்கத்தை நாங்கள் அளித்துள்ளோம்.
கடந்த 8 ஆண்டுகளாக இந்த வழக்குகள் நடைபெற்று வரும் நிலையில் சில வழக்குகள் இன்னும் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யப்படவில்லை இதன் காரணமாக எங்களது தொழில் மிகவும் நலிவடைந்து உள்ளது. இதனை சார்ந்து வாழும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வியல் பாதிக்கப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களில் தங்குதடையின்றி கிரானைட் குவாரிகள் நடைபெற்று வரும் நிலையில் மதுரை மாவட்டத்தில் மட்டும் இந்த தடை நீடிப்பது மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.
கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக தமிழக அரசு மறு விசாரணை மேற்கொள்ள வேண்டும். இந்த விசாரணையின் முடிவில் விதிமீறல் நடைபெற்ற குவாரிகளில் அரசு அபராதம் விதிப்பதோ அல்லது உரிமத்தை ரத்து செய்வதோ செய்யட்டும். அதுவரை எங்களது தொழில் தடையின்றி நடைபெறுவதற்கு தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உத்தரவிட வேண்டுகிறோம் என்றார்.
LatestNews
கொங்குநாட்டு பூப்பறிக்கும் விழா

கோவை மாவட்டத்திலுள்ள அங்காளம்மன் கோவிலில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு பூப்பறிக்கும் திருவிழா நடைபெற்றது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகிலுள்ள மெட்டுவாவி கிராமத்தில் ஒரு அங்காளம்மன் உள்ளது. அக்கோவிலில் காணும் பொங்கலையொட்டி 40 ஆண்டுகளுக்குப் பின் "கொங்குநாட்டு பூப்பறிக்கும்" திருவிழா எனும் கலாச்சார விழா நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்ட பெண்கள் தங்களது வீடுகளிலிருந்து பொரி,சுண்டல் கடலை, பழங்கள் இனிப்புகள் ஆகியவற்றை கூடையில் போட்டு தலையில் வைத்து ஊர்வலமாக ஊர் எல்லையில் உள்ள அங்காளம்மன் கோவிலுக்கு சென்றனர்.
அதன்பின் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்து முடிந்த பின் கூடையில் கொண்டு வந்த இனிப்புகள்,பழங்கள் போன்றவற்றை பகிர்ந்து உண்டு மகிழ்ந்தனர்.மேலும் இவ்விழாவில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் பாரம்பரியக் கலைகளுள் ஒன்றான வள்ளி கும்மி பாட்டு பாடி நடனம் ஆடினர்.
LatestNews
மதுரையில் கொரோனா தடுப்பூசி
உலகமே, நாடே எதிர்பார்த்த விசயம் தடுப்பு ஊசி இன்று பயன்பாட்டுக்கு வந்துள்ளது எனவும், பிரதமரின் நடவடிக்கை வெற்றி பெற்று உள்ளதாகவும் மதுரையில் கோவிட் – 19 தடுப்பு ஊசி வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி பேட்டி:
மதுரை
மதுரை அரசு இராஜாஜி தலைமை மருத்துவமனையில் கோவிட் – 19 தடுப்பு ஊசி வழங்கும் நிகழ்வில் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர், முதல்வர் மற்றும் துணை முதல்வர் தடுப்பு ஊசி வழங்கும் பணிகளை தொடங்கி வைத்தனர், இந்தியா முழுதும் கோவிட் – 19 தடுப்பு ஊசி வழங்கும் பணியை பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார், மதுரையிலிருந்து கோவிட் – 19 தடுப்பு ஊசி வழங்கும் நிகழ்வில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் பங்கேற்றனர், தமிழகம் முழுதும் 166 மையங்களில் கோவிட் – 19 தடுப்பு ஊசி வழங்கப்படுகிறது, முதல் தடுப்பு ஊசி தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் தலைவர் மருத்துவர் செந்திலுக்கு போடப்பட்டது, ஒரு நாளுக்கு ஒரு மையத்தில் 100 பேருக்கு தடுப்பு ஊசி போடப்படுகிறது, மருத்துவர், செவிலியர், சுகாதார பணியாளர்களுக்கு கோவிட் – 19 தடுப்பு ஊசி போடப்படுகிறது, முதல் கட்டமாக தமிழகம் முழுதும் 6 இலட்சம் முன் களப்பணியாளர்களுக்கு தடுப்பு ஊசி போடப்படுகிறது, இந்திய மருத்துவத்துறையின் வழிகாட்டுதல் படி கோவிட் – 19 தடுப்பு ஊசி போடப்படுகிறது, ஒரு தடுப்பு ஊசி பாட்டிலில் 5 மி.லி மருந்துகள் உள்ளன, ஒரு நபருக்கு 0.5 மி.லி தடுப்பு ஊசி மருந்துகள் செலுத்தப்படும், இந்திய மருத்துவத்துறையின் வழிகாட்டுதல் படி கோவிட் – 19 தடுப்பு ஊசி போடப்படுகிறது, ஒரு தடுப்பு ஊசி பாட்டிலில் 5 மி.லி மருந்துகள் உள்ளன, ஒரு நபருக்கு 0.5 மி.லி தடுப்பு ஊசி மருந்துகள் செலுத்தப்படும், கோவிட் – 19 தடுப்பு ஊசி போட்டு கொண்டவர்கள் மது அருந்த கூடாது என அறிவிக்கப்பட்டு உள்ளது, நிகழ்வின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி கூறுகையில் "பிரதமர் எடுத்த நடவடிக்கைகள் வெற்றி பெற்றுள்ளது, முதல் கட்டமாக முன் களப்பணியாளர்களுக்கு தடுப்பு ஊசி போடப்படும், ஒவ்வொருவருக்கும் இரண்டு கட்டமாக தடுப்பு ஊசி போடப்படும், தமிழகத்தில் 166 இடங்களில் தடுப்பு ஊசி போடப்படுகிறது, தமிழகம் முழுதும் 226 இடங்களில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது, வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு நடைபெற்று இருக்கிறது, பிரதமரின் விட முயற்சியால் தடுப்பு ஊசி பயன்பாட்டுக்கு வந்துள்ளது, முதல் கட்டமாக 5 இலட்சத்து 56 ஆயிரம் தடுப்பு ஊசிகள் தமிழகம் வந்துள்ளது, அனைவரும் தடுப்பு ஊசிகள் எடுக்க வேண்டும், உலகமே, நாடே எதிர்பார்த்த விசயம் தடுப்பு ஊசி, இன்று ஒரு நல்ல நாளாக அமைந்துள்ளது, முழு ஆராய்ச்சி செய்யப்பட்டு தடுப்பு ஊசி பயன்பாட்டுக்கு வந்துள்ளது, மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பு ஊசி பயன்பாட்டுக்கு வந்துள்ளது, நம்மை காக்கும் மருத்துவர்கள் தான் முதலில் தடுப்பு ஊசி போட்டு கொண்டு உள்ளார், தடுப்பு ஊசி போட்டு கொள்வதில் மக்கள் அச்சப்பட வேண்டும், மக்கள் கொரைனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும், தற்காலிக எம்.ஆர்.பி செவிலியர்கள் படிப்படியாக நிரந்தரம் செய்யப்படுவார்கள், தமிழக அரசு தொடர்ந்து கொரைனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது" என கூறினார்
LatestNews
நந்திக்கு சிறப்பு அலங்காரம்

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் நந்திகேஷ்வரனுக்கு நடைபெற்ற பூஜை. காய்கனிகளுடன் காட்சி தருகிறார்.
பாலாஜி…திருவண்ணாமலை
-
LatestNews1 month ago
கோவை வள்ளல் சாந்தி கியர்ஸ் உரிமையாளர் இற ைவனடி சேர்ந்தார்.
-
LatestNews3 months ago
வீட்டுக்குள் புகுந்து உடும்பு பிடிபட்டத ு..
-
LatestNews3 months ago
மதுரை அருகே நந்தனார், வள்ளுவர் சிலை கண்ட ுபிடிப்பு…
-
LatestNews3 months ago
தேவர் சிலை அலங்கரிப்பு..
-
LatestNews4 months ago
பாலியல் பகுதியாக மாறி வரும் வாடிப்பட்டி?