Connect with us

LatestNews

உலை கண்டுபிடிப்பு

Published

on

கீழடியை மிஞ்சும் உலைப்பட்டி – கிமு 5ஆம் நூற்றாண்டு இரும்பு உலை கண்டுபிடிப்பு

மதுரை அருகே கீழடியை மிஞ்சும் வகையில் மற்றொரு தொல்லியல் மேடு, கிமு 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரும்பு உலை ஆகியவை ஆய்வாளர்களால் கண்டெடுப்பு. அது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.

தமிழகத் தொல்லியல் துறையால் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வரும் கீழடியைப் போன்றே மதுரை அருகே மற்றொரு தொல்லியல் மேடு ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. இங்கு கிமு ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த இரும்பு உருக்கும் உலை இருந்ததும் தெரியவந்துள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது உலைப்பட்டி. இந்த ஊரிலுள்ள மேற்கு மலையின் அடிவாரத்தில் பல ஏக்கர் கணக்கில் கிமு 2000லிருந்து கிமு 3 ஆயிரம் காலகட்டத்தைச் சேர்ந்த ஈமக்காடு பரந்து விரிந்து காணப்படுகின்றன. முதுமக்கள் தாழிகள், கல் வட்டங்கள், குத்துக்கல், கற்பலகைகள் என இறந்தோரின் நினைவாக உருவாக்கப்படும் அனைத்து ஈம சின்னங்களும் இங்கு உள்ளன.

அதுமட்டுமன்றி 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட இரும்பு உருக்கும் உலை ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த இடத்தில் கன்னங்கரிய நிறத்திலான இரும்புக் கழிவுகள் குவியலாக காணப்படுகின்றன. இது மிக அரிதான ஒன்றாகும். இதுகுறித்து தொல்லியல் அலுவலர் சக்திவேல் கூறுகையில், இப்பகுதியைச் சேர்ந்த காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக பொருளாதார பேராசிரியர் முருகேசன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியர் சென்ராய பெருமாள் ஆகியோர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இப்பகுதியில் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. பல்வேறு காலகட்டங்களில் நடைபெற்ற ஈம நடைமுறைகளை இங்கே காண முடிகிறது.அதுமட்டுமன்றி இந்தப் பகுதியில் மிகப் பெரிய அளவிலான இரும்பு உருக்கும் உலை ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் விரிவான கள ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் போது மிகப்பெரிய வரலாற்று உண்மைகள் வெளியே தெரிய வாய்ப்பு உள்ளது. தமிழக அரசுக்கு முறையான தகவல் தெரிவிக்கப்பட்டு இங்கு அகழாய்வு மேற்கொள்ள முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார்.

மேற்கு மலைத் தொடரின் ஒரு பகுதியாக அமைந்துள்ள இந்த மலை அடிவாரத்தில் காணும் இடம் எங்கும் தாழிகளும் பானை ஓடுகளும் ஆங்காங்கே எலும்புத் துகள்களும் பரவலாக காணப்படுகின்றன. இறந்தார் நினைவாக அவர் பயன்படுத்திய பொருட்களை புதைத்த கலயங்கள் முழு வடிவத்தில் கிடைக்கின்றன.

அருகிலுள்ள சூலப்புரம் கிராமத்திலுள்ள இந்து ஆரம்பப்பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற அழகர்சாமி கூறுகையில், இந்த மலை அடிவாரப் பகுதியில் ஊர்கள் இருந்ததாகவும், அங்கே மக்கள் வாழ்ந்ததாகவும் எனது முன்னோர்கள் கூறக் கேட்டிருக்கிறேன் இந்த பகுதியில் தற்போதும் பல்வேறு பழமையான பொருள்கள் கிடைத்து வருகின்றன. ஆகையால் இந்த பகுதியில் தமிழக அரசு மிக விரிவான அளவில் ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் வைத்தார்.

காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக பொருளாதாரத் துறையில் கெளரவ பேராசிரியராக பணியாற்றும் முருகேசன் கூறுகையில், இங்கு வாழ்ந்த மக்கள் சமூக பொருளாதார கலை பண்பாட்டு வளர்ச்சியோடு வாழ்ந்தார்கள் என்பதை உலகறியச் செய்ய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். தன்னார்வத்தோடு இந்த பகுதியில் அலைந்து திரிந்து நாங்கள் இதனை கண்டறிந்து தமிழக தொல்லியல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளோம். ஆகையால் இங்கு மிகப்பெரிய அளவில் தமிழகஅரசு ஆய்வு நடத்த வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள் என்றார்.

மலையிலிருந்து கல்லெடுத்து இறந்தோரை நினைத்து வழிபடுகின்ற மரபின் தொடர்ச்சி அந்தப் பகுதியில் தற்போதும் இருக்கிறது என்பதுதான் வியப்புக்குரிய ஒன்று. இந்த மலை அடிவார பகுதியில் அமைந்துள்ள மாலை சாமி என்ற கிபி பதினைந்தாம் நூற்றாண்டு கோவில் ஒன்று இதனை உறுதி செய்கிறது. அக்கோவிலின் பூசாரி செல்லத்துரை கூறுகையில், எங்களது முன்னோர்கள் இறந்ததற்கு பிறகு அவர்களின் நினைவாக மலையிலிருந்து கல்லெடுத்து இங்கே நடுவது வழக்கம் அதனை ஒப்பக்கல் என்று அழைத்து வருகிறோம். தண்ணீர் மஞ்சள் கோமியம் பால் ஆகியவற்றால் கழுவி சுத்தம் செய்து அவர்களின் நினைவாக அந்த ஒப்பக் கல்லை இங்கே நட்டு வைத்து வழிபடுகிறோம் என்கிறார்.

நீத்தாரை நினைவூட்டும் நீண்ட நெடிய மரபும் பண்பாடும் தமிழர்களிடையே தொன்று தொட்டு இன்றளவும் நிலவி வருகிறது. இந்த மரபார்ந்த எச்சங்களை ஏதேனும் ஒரு வகையில் இந்த மண் தனக்குள் புதைத்து வைத்து, ஒவ்வொரு கால கட்டத்திலும் அதனை உலகமே அறிய வெளியே தந்துகொண்டே இருக்கிறது. அப்படி ஒரு வரலாற்றுப்பூர்வ தொல்லியல் களமாகத்தான் உலைப்பட்டியையும் நாளைய உலகம் நிச்சயம் பேசும். ஆகையால் கீழடியை போன்று உலைப்பட்டியையும் தமிழக தொழில்துறை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை இந்தப் பகுதி மக்களின் வேண்டுகோள் விடுத்துள்ளனர்..

Continue Reading
Advertisement
Click to comment

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

LatestNews

கிரைம் செய்திகள்

Published

on

[26/01, 11:15 AM] Pari: மதுரையில் பைக் திருட்டு ஆசாமி
குண்டர் சட்டத்தில் கைது போலீஸ் கமிஷனர் உத்தரவு
மதுரை ஜன 26 தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
மதுரை ஆழ்வார்புரம் வைகை வடகரை சீனி நாயக்கர் தோப்பு வை சேர்ந்தவர் சிவ பாண்டி கிருஷ்ணன் மகன் பழனிவேல் பாண்டி 24 .இவர்தொடர்ந்து பைக்திருட்டு மற்றும்வழிப்பறியில் ஈடுபட்டு வந்தார்‌இவரது இந்ததிருட்டுசெயலை கட்டுப்படுத்தும் விதமாக போலீஸ் கமிஷனர் பிரேம்ஆனந்த்சின்காஉத்தரவின்பேரில் பவனிவேல்பாண்டியைபோலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
********
[26/01, 11:16 AM] Pari: நீச்சல் பயிற்சியின்போது சரவணப்பொய்கையில் டைவ்அடித் பயிற்சியாளர் தலையில்அடிபட்டு பலி மணி
மதுரை ஜன 26 நீச்சல் பயிற்சியின் போது டைவ்அடித்தபயிற்சியாளர் தலையில் அடிபட்டு பலியானார்.
திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் 70.இவர்திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் குழந்தைகளுக்கு தினந்தோறும் நீச்சல் பயிற்சி கொடுப்பது வழக்கமாக கொண்டிருந்தார் .இந்த நிலையில் நேற்று நீச்சல் பயிற்சி கொடுக்கும் போது சரவணப் பொய்கையில் மேல் பகுதியிலிருந்து தண்ணீருக்குள் டைவ் அடித்தார்.அப்போது குளத்தின் படிக்கட்டில்விழுந்ததால் தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் பலியானார் .இந்த சம்பவம் தொடர்பாக மனைவி சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதாவுசெய்துகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
**********************
குடிப்பழக்கத்தை தந்தை கண்டித்ததால்
மகன் தூக்குப்போட்டு தற்கொலை
மதுரை ஜன 26 குளித்துவிட்டு வந்த மகனை தந்தை கண்டித்ததால் மனமுடைந்த தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை நேதாஜி ரோடு பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் மகன் மணிவண்ணன் 32. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது .குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார் .இவரது பழக்கத்தை அப்பா கண்டித்ததால் மனமுடைந்த மணிவண்ணன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இதுகுறித்து அப்பா பார்த்திபன் கொடுத்த புகாரின் பேரில் திடீர்நகர்போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
*****************
திருப்பரங்குன்றம் கோவில் அருகே
நடந்து சென்ற பெண்ணை கத்தியால் தாக்கி செயின் பறிப்பு
மர்ம ஆசாமிக்கு வலை
மதுரை ஜன 26 திருப்பரங்குன்றம் கோயில் அருகே நடந்து சென்ற பெண்ணை கத்தியால் தாக்கி 3 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
தனக்கன்குளம் கலைஞர் நகர் ஆறாவது தெருவை சேர்ந்தவர் சுருளிவேல் மனைவி லலிதா 42. திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சென்றிருந்தார்.அவர்அங்கு உள்ள வெயில் காத்த அம்மன் கோவில் அருகே நடந்து சென்ற போது அவரை வழி மறித்த மர்ம ஆசாமி கத்தியை காட்டி மிரட்டி அவரை தாக்கிவிட்டு அவர் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை பறித்து சென்று விட்டார் ‌இந்த நகை பறிப்பு சம்பவம் குறித்து லலிதா திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
*******,**********
திருப்பரங்குன்றம் கண்மாயில்
நல்லிரவில்
மணல் திருடிய ஜேசிபி எந்திரம் லாரி பறிமுதல்
மதுரை ஜன 26 திருப்பரங்குன்றம் கண்மாயில் நல்லிரவில் மணல் திருடிய ஜேசிபி எந்திரம் ற்றும் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சுப்ரமணியபுரம் போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்ஷேக்அபுபக்கர். இவர் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது முனியாண்டிபுரத்தில் மாடக்குளம் கண்மாய் அருகே நள்ளிரவில் மணல் திருடிக்கொண்டிருந்தது தெரியவந்தது .அவர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போது அங்கு ஜெ.சி.பிஎந்திரத்தில் மணல்திருடிக்கொண்டிருந்த இரண்டு பேர் போலீஸ் வருவதை கண்டு தப்பி ஓடிவிட்டனர் .அங்கு சென்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணல் திருடர்கள் பயன்படுத்திய ஜேசிபி எந்திரம் மற்றும் லாரியை போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். ஜே.சி.பி.மற்றும் லாரியைபறிமுதல்செய்தபோலீசார் வழக்கு பதிவு செய்து தப்பிஓடிய ஆசாமிகளை தேடிவருகின்றனர்.

**********************
மதுரை கே புதூரில்
வீட்டை உடைத்து தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டு
மதுரை ஜன 26 மதுரை கே.புதூரில்வீட்டை உடைத்து தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
கே புதூர், ராம லட்சுமி நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் ராஜ்மோகன் 22 .இவர்கள் குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு திரும்பி வந்தனர் .அப்போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருந்தது .வீட்டில் வைத்திருந்த 300 கிராம் வெள்ளி பொருட்கள் தங்கமூக்குத்தி மற்றும் கடிகாரம் ஒன்றையும் மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இந்த திருட்டு தொடர்பாக ராஜ்மோகன் கொடுத்த புகாரின் பேரில் புதூர்போலீசார் வழக்கு பதிவு செய்து
திருட்டு ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
******************

Continue Reading

LatestNews

புதிய படகு

Published

on

மதுரை தெப்பக்குளத்தில் சவாரிக்காக புதியதாக கொண்டு வரப்பட்ட படகு.

Continue Reading

LatestNews

தமிழன்னை சிலைக்கு அமைச்சர் மரியாதை:

Published

on

மொழிப்போர் தியாகிகள் தினத்தையொட்டி மதுரை அதிமுக மாணவரணி சார்பில் தமுக்கம் அருகே உள்ள தமிழன்னை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ. அருகில் மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் எம் எஸ் பாண்டியன் மாவட்ட பொருளாளர் ராஜா மாணவரணி செயலாளர் குமார் உள்ளிட்ட திரளான மாணவர்கள் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Continue Reading

சினிமா..

Follow me on Twitter

Dhinasari News

72வது குடியரசு தினத்தில்… ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை!

நாட்டின் 72ஆவது குடியரசுத் திருநாளை முன்னிட்டு, என் இதயம்கனிந்த நல்வாழ்த்துக்கள். பன்முகத்தன்மை நிறைந்த நமது தேசத்தில் 72வது குடியரசு தினத்தில்… ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை! முதலில்… [...]

ஜன.26: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது. ஜன.26: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

வங்கி பற்றி வலைதளங்களில் கவனமாயிருங்க: SBI எச்சரிக்கை!

பெரும்பாலான மோசடிகள் மொபைல் செயலிகள், வலைத்தளங்கள் மூலமே நடக்கிறது. வங்கி பற்றி வலைதளங்களில் கவனமாயிருங்க: SBI எச்சரிக்கை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

உலக சாதனை படைத்த ஹேஷ்டாக்! ஒரே நாளில்  100 மில்லியன் ட்வீட்!

டிவிட்டர் வரலாற்றிலேயே 100 மில்லியன் ட்வீட்களைப் பெற்ற முதல் டேக் என்ற சாதனையை மகேஷ் பாபு படம் பெற்றிருக்கிறது உலக சாதனை படைத்த ஹேஷ்டாக்! ஒரே நாளில்… [...]

தங்கத்தைக் கடத்தி சுங்கத்திடம் மாட்டிய இளைஞன்! தங்கத்தை முழுங்கி தப்பிக்க முயற்சி!

அசாருதீனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தங்கத்தைக் கடத்தி சுங்கத்திடம் மாட்டிய இளைஞன்! தங்கத்தை முழுங்கி தப்பிக்க முயற்சி! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

Follow Us

ஆன்மிகம்…

Trending

Copyright © 2020 Daily Tamil News Developed and Maintained by SSS Media, Chennai TN, IN

%d bloggers like this: