மழையால் சுவர் இடிந்து முதியவர் சாவு..

*மழையால் சுவர் இடிந்து விழுந்ததில் தூங்கி கொண்டிருந்தவர் பலி, மூன்று தினங்களுக்கு பின் உடல் மீட்பு*

மதுரை :

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்குட்பட்ட அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த செம்பூரணி ரோட்டில் வசிப்பவர் மூக்கையா.(55 ) இவருக்கு திருமணம் ஆகவில்லை. நாதஸ்வர வித்துவானான இவர் மூன்று தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையின் போது வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததால் உயிரிழந்துள்ளார்.
தூங்கி கொண்டிருந்த மூக்கையா மூன்று தினங்களாக வீட்டை விட்டு வெளியே வராத நிலையில் இவரதுவீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் இன்று மூக்கையாவின் வீட்டிற்கு சென்று பார்த்த போது சுவர் விழுந்ததால் சுவர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த நிலையில் இருந்ததை கண்டு போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

அவனியாபுரம் போலீசார் முக்கையா மரணம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: