பேக்கரி உரிமையாளர்களுக்கான விழிப்புணர் வு முகாம்..

உணவு பாதுகாப்புதுறைசார்பில்
பேக்கரி உரிமையாளர்களுக்கான
விழிப்புணர்வு முகாம்:

புதுக்கோட்டை:

தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை சார்பாக இனிப்பு மற்றும் பேக்கரி உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு முகாம் புதுகையில்நடந்தது.கூட்டத்திற்கு
உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.ஆர்.ரமேஷ்பாபு தலைமை வகித்து பேசினார்.
புற்றுநோய் வரவழைக்ககூடிய அதிக நிறமிகளை இனிப்பு வகைகளில் சேர்க்க கூடாது என்றும், மேலும், கடைகளில் வைக்கப்படும் அனைத்து இனிப்பு மற்றும் கார வகைகளுக்கும் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி குறிப்பிடபட்டிருக்க வேண்டும் என்றும் தயாரிப்பு செய்யும் இடம் மற்றும் விற்பனை செய்யும் இடங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
அனைத்து இனிப்பு மற்றும் பேக்கரி உரிமையாளர்களும் உணவு பாதுகாப்பு துறை பதிவு/உரிமம் பெற்றிருக்க வேண்டும் என்றும் இனிப்பு வகைகளை திறந்த வெளியில் வைத்திருக்க கூடாது என்றும் கூறினார்.
கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும்அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அறிவுறுத்தலின் பேரில், கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் விதை பந்துகள் வழங்கப்பட்டன.
கூட்டத்தில் , உணவு பாதுகாப்பு அலுவலர்கள் விஜயகுமார், சிவக்குமார் மற்றும் கார்த்திக் பேக்கரி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: