மைய நூலக கூடுதல் கட்டிடம் திறப்பு விழா…

புதுகைமாவட்ட மையநூலகத்தில்
கூடுதல் கட்டிடம் திறப்பு.

புதுக்கோட்டை:

புதுகை
மாவட்ட மையநூலகத்தில்
கடியாபட்டி சீ.பழனியப்ப
செட்டியாரால் ரூ.25லட்சம்
நன்கொடை வழங்கப்பட்டு அதன்மூலம் கட்டப்பட்ட கூடுதல்
இணைப்பு கட்டிடம் கட்டிமுடிக்கப்
பட்டு அதன்திறப்புவிழா
மாவட்டமையநூலகத்தில்
நடைபெற்றது.
மாவட்ட நூலக அலுவலர்
அ.பொ.சிவக்குமார் தலைமை
வகித்தார்.சிறப்பாககட்டி முடிக்கப்பட்ட கூடுதல் கட்டிடத்தை நன்கொடையாளர் சீ.பழனியப்பசெட்டியார் திறந்து வைத்தார்.முதல் நிலைநூலகர்
கி.சசிகலா வரவேற்றுபேசினார்.
வாசகர் வட்ட தலைவர் கவிஞர் தங்கம்மூர்த்தி ,வாசகர் வட்ட பொருளாளர்
பெரி.திருப்பதி ,துணைத்தலைவர்
ஆர்.ராஜ்குமார்,பேராசிரியர்
சா.விஸ்வநாதன்,வாசிப்பை நேசிப்போம் கோ.சாமிநாதன்,
திருச்சி வாசகர் வட்ட தலைவர்
தமிழ்செம்மல் கோவிந்தசாமி,
முனைவர் அருணாச்சலம்
உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.
நிறைவாக 2ம்நிலை நூலகர்
பா.முத்து நன்றி கூறினார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: