பலசரக்கு கடையில் தீ விபத்து…

பலசரக்குக் கடையில் திடீர் தீவிபத்து போராடி அணைத்த தீயணைப்பு துறையினர்:

மதுரை

மதுரை சூர்யா அருகே நகர் அல்அமீன் நகரில் உள்ள பலசரக்கு கடையில் நள்ளிரவு 1:20 அளவில் தீப்பிடித்து எரிவதாக தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் வந்தது நிலைய அலுவலர் சுப்பிரமணி தலைமையிலான தீயணைப்பு துறையினர் பலசரக்கு கடையில் எரிந்து கொண்டிருந்த தீயை சுமார் 2 மணி நேரம் போராடி அணைத்தனர். மேலும், அருகிலுள்ள கடைகளுக்கும் வீடுகளுக்கும் தீ மேலும் பரவாமல் தடுத்தனர். நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது .
தீவிபத்து குறித்து ,போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: