பஞ்சாயத்து ராஜ்முறையை அமல்படுத்து

*ஊராட்சி ஒன்றியங்களில் அரசு புதிய பேக்கேஜிங் டெண்டர் முறையை ரத்து செய்ய கோரியும் பஞ்சாயத்து ராஜ் முறையை அமல்படுத்தக்கோரியும் மதுரை ஆட்சியர் அலுவலுகம் முன்பு ஆர்ப்பாட்டம்*

மதுரை மாவட்டம் கள்ளிகுடி,கொட்டாம்பட்டி ஊராட்சி மன்றதலைவர்கள் கூட்டமைப்பின் சார்பாக 60க்கும் மேற்பட்டோர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊராட்சி தலைவர்கள் சக்தி பிரியா கண்ணன், ராஜலட்சுமி செல்வமணி, மாரீசுவரி நவநீதன் ஆகியோர் தலைமையில் 67 ஊராட்சி தலைவர்கள் அளித்த மனு அளித்தனர்.

தமிழக அரசின் புதிய பேக்கஜிங் டெண்டர் முறையால் உரிமைகள் பறிக்கப்பட்டு உள்ளது.

எனவே புதிய டெண்டர் முறையை அரசு கைவிட வேண்டும்.

நிதிக்குழு மானியங்களில் மாநில அரசு தலையிட கூடாது.

பஞ்சாயத்து ராஜ் முறையை அமல்படுத்த வேண்டும்.

நூறு நாட்கள் வேலை பணியாளர்களுக்கு அரசு உடனடியாக அடையாள அட்டை வழங்க வேண்டும்.

மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டங்களில் ஊராட்சிகளுக்கு உரிய அதிகாரம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது..

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: