சரக்கு வாகனங்களில் வந்து வரவேற்ற அதிமுக மகளீரணி…

முதல்வர் மதுரை வருகைக்கு சரக்கு வாகனங்களில் வந்து வரவேற்ற அதிமுக மகளிரணியினர்.

முக கவசம், சமூக இடைவெளியின்றி கூடிய அதிமுக தொண்டர்கள்.

விமான நிலையம் செல்ல வந்த பயணிகள் போக்குவரத்து பாதிப்பால் அவதி

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மதுரை விமான நிலையத்தில் தமிழக முதல்வரை வரவேற்க வந்த அதிமுகவினரால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது மேலும் விமான நிலையத்தின் வெளி வாசலில் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் சார்பில் வரவேற்பு அளிக்க திருமங்கலத்திலிருந்து 50க்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்களில் பெண்கள் மற்றும் தொண்டர்கள் வந்தனர் விதிமுறைகளை மீறி மாஸ்க் அணியாமல் கூட்டமாக வந்தது குறிப்பிடத்தக்கது நோய்த் தொற்று குறித்து அரசு விழிப்புணர்வு செய்தாலும் அதிமுகவினர் அலட்சியமாக இருந்தது .

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: