LatestNews
சசிகலாவுக்கு ஆதரவாக அரசு ஊழியர்கள் சுவரொ ட்டிகள்?
சசிகலாவுக்கு ஆதரவாக அரசு ஊழியர்கள் – மதுரையை பரபரப்புக்கு உள்ளாக்கிய சுவரொட்டி
சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து காவல்துறை மற்றும் போக்குவரத்து துறையில் பணியாற்றும் இரண்டு ஊழியர்கள் ஒட்டியுள்ள சுவரொட்டியால் மதுரையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வருகிற அக்டோபர் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தி விழா நடைபெற உள்ள நிலையில், பசும்பொன்னில் உள்ள தேவரின் சிலைக்கு தங்கக் கவசம் வழங்கிய, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து அரசு ஊழியர் இருவரால் கட்டப்பட்டுள்ள சுவரொட்டி பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
அந்த சுவரொட்டியில், பாண்டிய நாட்டின் மன்னர் வாரிசு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு 17 கிலோ தங்கம் தந்து அழகு பார்த்த சோழநாட்டுப் பேரரசி சின்னம்மா சசிகலா அவர்களே 2021 ஆம் ஆண்டில் தஞ்சை அரண்மனை மன்னர் பேரரசியாக பொறுப்பேற்று தமிழினம் காக்க தமிழ்நாட்டு மக்களை காக்க ஆணையிடு! ஒற்றர் படை போர் படை தற்கொலை படை தயார் நிலையில் உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சுவரொட்டியின் கீழே காவல்துறை தன்மான போராளி மா. ஒச்சாத்தேவர், பி.பில்பாண்டி, தளபதி, அரசு போக்குவரத்து கழகம் என்று குறிப்பிட்டு இருவரது புகைப்படங்களுடன் அச்சுவரொட்டி மதுரை நகரெங்கும் ஒட்டப்பட்டுள்ளது.
கட்சி சார்ந்தும் சாதி அமைப்புகள் சார்ந்தும் அரசு ஊழியர்கள் இருவர் சுவரொட்டி ஒட்டி வாழ்த்து தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
LatestNews
சோலைமலை முருகன் கோயிலில் கொடியேற்றம்…

சோலைமலை முருகன் கோயிலில் கொடியேற்றம்
அழகர்கோவில்
மதுரை அருகே அழகர்மலைமேல் உள்ள 6வது படைவீடு எனும் சோலைமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவையொட்டி கொடியேற்றத்துடன் தொடங்இயது இதில் கோவில் நிர்வாக அதிகாரி அனிதா உள்பட பலர் பங்கேற்றனர்.
LatestNews
விடியோவை பார்த்து பரிசு வழங்க கோரிக்கை

பாலமேடு ஜல்லிக்கட்டில்
வீடியோவை பார்த்து பரிசு வழஙக கோரி ஆட்சியரிடம் மனு
மதுரை :
பாலமேடு ஜல்லிக்கட்டில் முறைகேடாக பரிசு வழங்கப்பட்டதாக கூறி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு விழா கமிட்டி நடத்திய முறைகேட்டை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. பொதும்பு பிரபாகரன் க்கு 17 மாடு பிடித்து முதலிடம் பிடித்தார். அதை மறுத்து மற்றொரு நபரை அறிவித்துவிட்டது. பாலமேடு ஜல்லிக்கட்டு வீடியோ பார்த்து அறிவிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
LatestNews
மதுபான கடை வேண்டாம்: பாஜக போர்க்கொடி…

டாஸ்மாக் கடை வைக்க எதிர்ப்பு
மதுரை
மதுரை மாவட்ட வாடிப்பட்டி வட்டம், பாலமேடு அருகே உள்ள சுக்காம்பட்டி கிராமத்தில் டாஸ்மார்க் கடை வைக்கக்கூடாது என்று , அக்கிரம மக்களும், பாரதிய ஜனதா கட்சியினரும்
மாவட்ட ஆட்சியாரிடம் மனுகொடுத்தனர்.