வாடிப்பட்டியில் தேங்காய் ஏலம்..

வாடிப்பட்டியில் அரசு சார்பில் தேங்காய் ஏலம்:

மதுரை

தமிழ்நாடு வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் மதுரை விற்பனை குழுவிற்கு உட்பட்ட வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் கடந்த 10 வாரங்களாக பிரதி புதன்கிழமை தோறும் பகல் 12 மணிக்கு நடைபெற்று வந்தது. இன்று 11 வது வாரமாக
நடைபெற்ற ஏலத்தில் 12 விவசாயிகளின் 13064 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்திற்கு மதுரை விற்பனைக் குழு செயலாளர்
மெர்சி ஜெயராணி அவர்கள் தலைமை தாங்கினார்.

இந்த ஏலத்தில் 12 வியாபாரிகள் பங்கு பெற்றனர். இன்று நடைபெற்ற ஏலத்தில் ரூ 16.10 க்கு அதிகபட்சமாக ஏலம் போனது குறிப்பிடத்தக்கது. மேலும் ரூபாய் 1.75 லட்சம் உடனடியாக வியாபாரிகளிடம் இருந்து பெற்று விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. இதன்மூலம் வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் மூலம் 1.5 லட்சம் தேங்காய்களுக்கு மேல் மறைமுக ஏலம் மூலம் விற்பனையானது குறிப்பிடத்தக்கதாகும். இது குறித்து, விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும், மதுரை விற்பனை க்குழ செயலாளர்
மெர்சி ஜெயராணி கூறுகையில் அடுத்து வருகின்ற காலங்களில் தேவைக்கேற்ப வாரம் இருமுறை ஏலம் நடைபெற முயற்சிகள் எடுக்கப்பட உள்ளதாகவும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விவசாயிகள், வியாபாரிகள் பலன் அடைய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து கொண்டார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: