Connect with us

LatestNews

கொரோனா மரணங்களை மறைக்கவில்லை: அமைச்சர்

Published

on

4,44 கோவியட் மரணங்களை மறைக்கவில்லை உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்படிதான் அறிவிக்கப்பட்டுள்ளது

அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஸ்டாலினுக்கு பதிலடி

மதுரை

4,44 கோவியட் மரணங்களை மறைக்கவில்லை உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்படிதான் அறிவிக்கப்பட்டுள்ளது

அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ளார்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி உள்ள கச்சைகட்டியில் காய்ச்சல் முகாமினை தொடங்கி வைத்து அதன்பின் கூட்டுறவு வங்கியின் சார்பில் விவசாயிகளுக்கு 23 லட்சம் ரூபாய் பயிர்க்கடன் வழங்கியும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 46 லட்சம் கடனுதவி வழங்கியை அமைச்சர் ஆர் பி உதயகுமார் வழங்கினார்

இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் வினய்,சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர்கே மாணிக்கம்,மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் சரவணன்,மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், மாவட்ட கழக அவைத்தலைவர் ஐயப்பன் ,கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் பா.வெற்றிவேல், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஐ.தமிழழகன், மாவட்ட இளைஞரணி செயலாளர் காசிமாயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூறியதாவது ;

இந்த நான்கு மாதத்தில் உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த கோவியட் நோயை கட்டுப்படுத்த வண்ணம் முதலமைச்சர் பல்வேறு போர் கால நடவடிக்கைகளை எடுத்து இரவு பகலாக பாடுபட்டு வருகிறார்

இதுவரை 21லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு மாதிரி பரிசோதனை செய்யபட்டுள்ளது இந்தியாவிலே தமிழகத்தில் தான் அதிக பரிசோதனை செய்யபட்டுள்ளது

இதுவரை தமிழகத்தில் 1 லட்சத்து 86 ஆயிரம் மேற்பட்டோரை கண்டறியப்பட்டு இதில் இதுவரை 1,36,793 நபர்களை மருந்தே இல்லாமல் குணப்படுத்தி உள்ளோம் மதுரை மாவட்டத்தில் 8,984 நபர்களை கண்டறியப்பட்டு அதில் 5,965 நபர்களை குணப்படுத்தி உள்ளோம்

அதேபோல் கிராமப் பகுதிகளில் இந்த தொற்று நோய் ஏற்படா வண்ணம் முதலமைச்சர் கிராமங்கள் தோறும் காய்ச்சல் முகாமை நடத்த உத்தரவிட்டிருந்தார் அதன்படி மதுரை மாவட்டத்தில் மட்டும் இதுவரை 2,235 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளது இதில் 1,56,289 மக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது சளி பரிசோதனை 1,10,864 நபர்களுக்கு செய்யப்பட்டுள்ளது

இந்த கொரோனா பணிக்காக தமிழகம் முழுவதும் இதுவரை 15 ,000க்கு மேற்பட்ட மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் உள்ளிட்டோரை முதலமைச்சர் நியமித்துள்ளார் மதுரை மாவட்டத்தில்இந்த கொரோனா நோய் பணிக்காக 730 மருத்துவர்களும், 890 செவிலியர்கள், 3,800 களப்பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர்

அதேபோல் மக்களின் தற்போதுள்ள உணர்வுகளை உள்வாங்கி முதலமைச்சர் செயல்படுகிறார் கலை மற்றும் அறிவியல், இன்ஜினியரிங் ,பாலிடெக்னிக் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வை ரத்துசெய்து அடுத்த ஆண்டு கல்வி ஆண்டில் சேரலாம் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளது ஒட்டுமொத்த பெற்றோருக்கும், மாணவர்களுக்கும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

அது மட்டுமல்லாது உலகமே இந்த நோயின் தாக்கத்தால் இருக்கும் பொழுது தமிழகத்தின் பொருளாதாரத்தை உயத்திடும் வண்ணம் இந்த நான்கு மாதத்தில் 30,664 கோடி மதிப்பில் தொழில் முதலீட்டை தமிழகத்திற்கு ஈர்த்து இதன்மூலம் 67,222 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கியுள்ளார்

இப்படி ஒட்டுமொத்த உலக மக்களின் கவனத்தை ஈர்த்து சாதனை படைத்து வரும் நமது முதலமைச்சரையும் செயல்பாட்டினை கண்டு பொறுத்துக்கொள்ள முடியாமல் தீய எண்ணத்தின் வடிவமாக இருக்கும் ஸ்டாலின் கொரோனா இறப்பைப் பற்றி பொய் கணக்கு என்று அரசியல் உள்நோக்கத்துடன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்

இன்றைக்கு தமிழகம் மட்டும்தான் நாள்தோறும் இந்த தொற்று நோய் குறித்து வெளிப்படையாக அறிக்கை வெளியிடுகிறது எதையும் மூடி மறைக்கவில்லை தமிழக அரசின் செயல்பாட்டை அனைவரும் பாராட்டுகின்றனர்

ஸ்டாலின் குறிப்பிட்டுள்ள 4,44 கோவியட் இறப்புகள் மறைக்கவில்லை இந்த 4,44நபர்களும் நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்கள் இவர்களுக்கு இணை நோயினால் இறந்தவர்கள் ஆனாலும் இவர்களை கோவியட் கணக்கில் சேர்க்கலாமா என்று பொது சுகாதார மாநில துணை இயக்குனர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது அதில் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்படி இணைய நோய் இருப்பவர்களுக்கு தொற்றுநோய் ஏற்பட்டு மரணமடைந்தாலும் அது கோவியட் மரணமாக கருதப்படவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி தமிழக அரசு அறிவித்தது

ஆனால் ஸ்டாலின் உண்மை நிலையை அறியாமல் பீதி ஏற்படுத்தும் வண்ணம் மரணத்தில் பொய்க்கணக்கு என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்

பொய் கணக்கு எழுதுபவர்கள் யார் என்று மக்களுக்கு நன்றாக தெரியும் ஏனென்றால் பொய்க்கணக்கு எழுதி ஊழல் செய்து அதன்மூலம் இந்தியாவிலேயே கலைக்கப்பட்ட ஆட்சி திமுகதான்

தினந்தோறும் அம்மா அரசுக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்து அதன் மூலம் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள ஸ்டாலின் யார் யாரையோ எழதி கொடுப்பதை வாசித்துக் கூடப் பார்க்காமல் அப்படியே வெளியிடுகிறார் ஏட்டுச் சுரைக்காய் வீட்டுக்கு உதவாது அதுபோல் ஸ்டாலின் அறிக்கை ஒருபோதும் மக்களுக்கு பயன்தராது என்று கூறினார்

Continue Reading
Advertisement
Click to comment

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

LatestNews

சகதியில் சிக்கி தவித்த மாடு மீட்பு…

Published

on

வடுகபட்டியில்
சேறுசகதியில்சிக்கிதவித்த
பசுமாடு மீட்பு:

வாடிப்பட்டி,மார்ச்:4.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே வடுகபட்டி முத்தாலம்மன்கோவில்தெருவை
சேர்ந்தவர் பெரியகருப்பன் மகன் பவுன் பாண்டியன்(35)விவசாயி. இவர் பசுமாடு
வளர்த்துவருகிறார் அந்த மாடு தற்போது சினைபிடித்துள்ளது. இந்நிலையில்
நேற்று காலை 10மணிக்கு வடுகபட்டி அரிசிஆலை எதிரில் உள்ள
பெரியாறுபாசனகால்வாய் ஓடையில் மாட்டினை குளிப்பாட்டிக்கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக சேரும்சகதியும்நிறைந்த புதைகுழிக்குள் மாடு
சிக்கிக்கொண்டது. உடனே அதை மீட்கமுயற்சித்தார் அவரால் முடியவில்லை. அந்த
புதைகுழியில் மாட்டின் கால்முழுவதும் உள்ளே இழுத்துக்கொண்டது இதனால், மாடு
எழமுடியாமல் அவதியடைந்தது.
இது சம்மந்தமாக தகவலறிந்த, வாடிப்பட்டி
தீயணைப்பு நிலைய அதிகாரி சதகத்துல்லா தலைமையில் தீயணைப்பு வீரர்கள்
1மணிநேரம் போராடி புதைகுழிக்குள் சிக்கியிருந்த சினைமாட்டினை மீட்டனர்.

Continue Reading

LatestNews

போலீஸ் கொடி அணிவகுப்பு…

Published

on

திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள அவனியாபுரம் பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கொடி அணிவகுப்பு பேரணி :

மதுரை

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
அவனியாபுரம் அயன் பாப்பாக்குடி மேல்நிலைப் பள்ளியில் இருந்து கொடி அணிவகுப்பு புறப்பட்டு அவனியாபுரம் பேருந்து நிலையம் கணக்குப்பிள்ளை தெரு பெரியார் நகர் இம்மானுவேல் நகர் பிரசன்னா காலனி வழியாக அவனியாபுரம் சிஎஸ் நகரில் பேரணி முடிவு பெற்றது.
இதில் , மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் துணை கமாண்டன்ட் ஜிந்தா தலைமையில் 75 வீரர்களும் , திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையாளர் சிவராஜ் பிள்ளை மற்றும் அவனியாபுரம் காவல் ஆய்வாளர் பெத்துராஜ், சார்பு ஆய்வாளர் தண்டீஸ்வரர், தமிழ்ச்செல்வம் அடங்கிய போலீசார் கொடி அணிவகுப்பு பேரணியில் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய சிறப்பு காவல் படை வீரர்கள் அணி வகுப்பை நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

LatestNews

வாக்கு மையங்கள் ஆய்வு…

Published

on

மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தேர்தல் வாக்கு மையங்கள் ஆய்வு:

சோழவந்தான்

வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சோழவந்தான் மற்றும் தென்கரை வருவாய் உட் கோட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள வாக்குச் சாவடி மையங்களை வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர். இதில், வாடிப்பட்டி தாசில்தார் பழனி குமார் தலைமை நில அளவையாளர் செந்தில் தேர்தல் துணை வட்டாட்சியர் இசக்கிமுத்து வருவாய் ஆய்வாளர்கள் அழகுகுமார் ராஜன் கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெயப்பிரகாஷ் முத்துக்குமரன் மணிவேல் சூசைஞானசேகரன் முபரக் சுல்தான் பழனி வெங்கடேசன் கார்த்திக் செல்வமணி சுரேஷ் கார்த்திஸ்வரி முத்துராமலிங்கம் பாண்டி ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர் .
மொத்த வாக்காளர்கள் 2180 87 இதில், ஆண்கள் வாக்காளர்கள் 107097 பெண் வாக்காளர்கள் 110 363 மற்றவர்கள் 10 மொத்த வாக்கு மையம் 126 உள்ளன இதில் 70 மையங்களை பார்வையிட்டனர் கட்டட தன்மை கழிப்பறை வசதி மின்வசதி காற்றோட்ட வசதி உட்பட அடிப்படை வசதிகள் எவ்வாறு உள்ளன என்று ஆய்வு செய்தனர்

Continue Reading

சினிமா..

Follow me on Twitter

Dhinasari News

தனியார் மருத்துவமனையிலும் முதியோர்களுக்கே முன்னுரிமை: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

தனது உத்தரவைப் புதுப்பித்து புதிய உத்தரவு ஒன்றை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அதில், அரசு மருத்துவமனைகள் தனியார் மருத்துவமனையிலும் முதியோர்களுக்கே முன்னுரிமை: உச்ச நீதிமன்றம் உத்தரவு! முதலில்… [...]

13 பெண்கள் என் குழந்தையை சுமக்கிறார்கள்: பெருமைப்பட்ட பேராசிரியர்!

78 குழந்தைகளுக்கு தந்தையான தகவலை பெருமையுடன் கூறியுள்ளார். 13 பெண்கள் என் குழந்தையை சுமக்கிறார்கள்: பெருமைப்பட்ட பேராசிரியர்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

குழந்தை ஸ்ரேயாதித்யா வந்து கொண்டிருக்கிறார்: கர்ப்பமாகியுள்ள செய்தியை பகிர்ந்த பாடகி!

எங்கள் வாழ்க்கையில் இந்த புதிய அத்தியாயத்திற்கு நாங்கள் தயாராகி வருவதால் குழந்தை ஸ்ரேயாதித்யா வந்து கொண்டிருக்கிறார்: கர்ப்பமாகியுள்ள செய்தியை பகிர்ந்த பாடகி! முதலில் தினசரி தமிழ் தளத்தில்… [...]

குழந்தைகளைக் கொன்று தாய் தற்கொலை!

அங்கு 3 மாத பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. குழந்தைகளைக் கொன்று தாய் தற்கொலை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

ராஜபாளையம் அருகே சிலை உடைப்பு! வேறு சிலை நிறுவி அமைதி ஏற்படுத்திய போலீசார்!

குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் சூழ்நிலை ராஜபாளையம் அருகே சிலை உடைப்பு! வேறு சிலை நிறுவி அமைதி ஏற்படுத்திய… [...]

Follow Us

ஆன்மிகம்…

Trending

Copyright © 2020 Daily Tamil News Developed and Maintained by SSS Media, Chennai TN, IN

%d bloggers like this: