வாரிசு அடிப்படையில் அதிமுகவில் பதவி கிடை யாது…அமைச்சர்

வாரிசு என்ற அடையாள அட்டையை கொண்டு அதிமுகவில் பதவி தருவது கிடையாது, அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5சதவித உள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநரிடம் இருந்து நல்ல பதில் வரும் என அமைச்சர் ஆர்பி உதயகுமார் பேட்டி.

மதுரையில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியபோது :

தமிழகம் ஒரு மணி நேர மழைக்கே தள்ளாடுகிறது நடிகர் கமல் கருத்துக்கு பதிலளித்த வல்லரசு நாடுகள் கூட வெள்ளத்தில் தவித்து வருகிறது, காணொலி முலம் அறிக்கை வெளியிடுவதை விட களத்தில் வந்து பார்க்கவேண்டும், அரசை குறை கூற வேண்டும் என்பதற்காக பேசி வருகிறார் தற்போதைய ஆட்சியில் நீர்நிலைகள் மிகச்சிறப்பாக தூர்வாரப்பட்டு உள்ளன.

எதிரிகள் எல்லாம் குட்டையை குழப்பி மீன் பிடிக்கலாம் என்பது போல வடகிழக்குப் பருவ மழையிலும் மீன் பிடிக்கலாம் என நினைக்கிறார்கள் என்ற அமைச்சர் தேர்தல் காலம் என்பதால் அரசை எப்படியாவது எந்த வகையிலாவது குறை சொல்ல வேண்டும் என குறை கூறுகின்றனர்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநரிடம் இருந்து நல்ல பதில் வரும் என காத்திருக்கிறோம்.
இந்த விவகாரத்தில் அரசுக்கு நல்ல பெயர் கிடைத்து விடுமோ என்ற அச்சத்தில் எதிர்க்கட்சிகள் குறை கூறுகின்றனர்.

அதிமுக அரசு மீது மாணவர்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையும் அதிகரித்துள்ளது.

டிஜிபி விவகாரத்தில் நிர்வாக வசதிக்காக எடுக்கப்படும் காரணங்களை விமர்சனம் செய்யக்கூடாது.
வாரிசு என்ற அடையாள அட்டையை கொண்டு அதிமுகவில் பதவி தருவது கிடையாது, அதிகமான இளைஞர்களை சட்டப்பேரவையில் கொண்டது அதிமுக மட்டுமே, இளைஞர்களுக்கு அட்சய பாத்திரம் போல் அள்ளி அள்ளி வாய்ப்புகளை தருகிற ஒரே இயக்கம் அதிமுக.

உழைத்தவர்கள் பதவி கேட்பது நியாயம்தான். அவர்கள் தலைமையிடம் தான் முறையிட முடியும். கொடுக்கிற இடத்தில் இருக்கக் கூடிய தலைமை அதை கருணையோடு பரிசீலிப்பார்கள். எங்களிடம் கருத்து வேறுபாடு இல்லை. கருத்துப்பரிமாற்றம் மட்டுமே உள்ளது.

ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுக எஃகு கோட்டையாக உள்ளது, கட்சியில் கருத்து வேறுபாடு இல்லை கருத்து பரிமாற்றம் தான் கட்சியின் நடந்து கொண்டுள்ளது.

நடிகர் விஜய் எல்லாம் மாவட்ட நிர்வாகிகளையும் சந்திக்க உரிமையுள்ளது.அவர் இயக்கம் சார்ந்த நிர்வாகிகளை சந்திப்பது விவாதிப்பதற்கு உரியது அல்ல. நடிகர் விஜய் நிர்வாகிகளை சந்திப்பதில் அதைத்தாண்டி யோசிப்பதற்கு ஒன்றுமில்லை.

பத்தாண்டு காலமாக கோட்டை பக்கம் வராமல் அதிகார பசியோடு திமுகவினர் உள்ளனர் எனவும் திமுகவின் காட்டு தர்பார் குடும்ப அதிகார மையம் அதிகார குறுக்கீடு அதிகார துஷ்பிரயோகம் நில அபகரிப்பு சட்டம் ஒழுங்கு சீரழிவு மின்தட்டுப்பாடு உள்ளிட்டவற்றை மக்கள் மறந்துவிட மாட்டார்கள். திமுக ஆட்சியின் அவலங்கள் மக்கள் மனதில் பசுமையாக உள்ளது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: