சிறைத்துறையினர் விழிப்புணர்வு பேரணி..

மதுரை மாவட்ட மத்திய சிறைத் துறையினரின் விழிப்புணர்வு இரு சக்கரப் பேரணி :

மதுரை

தமிழக காவல்துறை டிஜிபியும் சிறைத்துறை தலைமை இயக்குனருமான சுனில் குமார் சிங் உத்தரவுபடி ,மதுரை மாவட்ட மத்திய சிறை காவலர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. முன்னதாக, சிறை வளாகத்தில் உள்ள மைதானத்தில் கரானா விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
மதுரை சரக சிறைத்துறை டிஐஜி பழனி உறுதி மொழியை வாசிக்க கண்காணிப்பாளர் ஊர்மிளா தலைமையில் அனைத்து சிறைக் காவலர்களும் கொரோனா விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து, கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை டி ஐ ஜி பழனி வெளியிட கண்காணிப்பாளர் ஊர்மிளா பெற்றுக்கொண்டார் .
பின்னர், டி ஐ ஜி பழனி மற்றும் கண்காணிப்பாளர் ஊர்மிளா ஆகியோர் கொடியசைத்து வைக்க சிறையில் இருந்து பேரணி கிளம்பியது. வழி நெடுகிலும் துண்டு பிரசுரங்கள் மற்றும் சனிடைசர், முகக் கவசங்கள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி மீண்டும் பேரணி சிறைக்கு வந்து சேர்ந்தது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: