இரு சக்கர வாகனங்களுக்கு தீ வைப்பு..

*மேலூரில் ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர் இருசக்கர வாகனம் உட்பட 3 இருசக்கர வாகனம் மர்ம நபர்களால் தீ வைப்பு, ..*

மேலூர் :

மதுரை மாவட்டம் மேலூர் பாரதியார்புரத்தைச் சேர்ந்தவர் ஜோதிமணி., இவர் கருங்காலக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வககூடத்தில் கணினி பிரிவு அலுவலராக பணிபுரிந்து வருகின்றார், இந்நிலையில் நேற்று இரவு இவரின் வீட்டின் அருகே இவரது இருசக்கர வாகனம், மற்றும் தனது கணவர் பாண்டித்துரை வாகனம், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள தனியார் வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் மென் பொறியாளராக உள்ள தனது சகோதரர் கோபிநாத் ஆகியோரின் இருசக்கர வாகனங்களுடன் நிறுத்தி வைத்திருந்த நிலையில், நள்ளிரவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மூன்று இருசக்கர வாகனங்களுக்கும் தீ வைத்து விட்டு தப்பித்துச் சென்றுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் வாகனங்களில் ஏற்பட்ட தீயை அணைத்ததுடன் இதுகுறித்து ஜோதிமணி மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் தகவல் அளித்துள்ளனர். இந்த தீவிபத்தில் இருசக்கர வாகனம் மூன்றும் முற்றிலும் எரிந்து சேதமானது,

மேலும் இதுகுறித்து பாண்டித்துரை அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மேலூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ரகுபதிராஜா மற்றும் ஆய்வாளர் சார்லஸ் தலைமையிலான காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் ..

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: