வாகன விபத்தில் மாணவர் பலி

அலங்காநல்லூர் அருகே
சைக்கிளில் சென்ற வாலிபர்
இரு சக்கர வாகனத்தில் மோதி பலி:

அலங்காநல்லூர்,

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே சைக்கிளில் சென்ற
பள்ளி மாணவர் இருசக்கர வாகனத்தில் மோதி இறந்துள்ளார்.
இது குறித்து கூறப்படுதாவது:
அலங்காநல்லூர் அருகே வாவிடமருதூரைச் சேர்ந்தவர் ஜெயசூர்யா 15. பள்ளி மாணவரான இவர் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு சைக்கிளில் அலங்காநல்லூர் அருகே சர்க்கரை ஆலை மேட்டுப்பட்டி அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தாராம்.
அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதி பலத்த காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு, மாணவர் ஜெயசூர்யா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து அலங்காநல்லூர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கொண்டையம்பட்டியில்
கால்வாயில் முதியவர் சடலம்:

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கால்வாயில் கிடந்த முதியவர் சடலத்தை போலீஸார் மீட்டனர்.
சுமார் 60 வயது மதிக்கத் தக்க முதியவர், அலங்காநல்லூர் அருகே கொண்டையம்பட்டியிலிருந்து- தோடநேரி செல்லும் பெரியாறு பிரதானக் கால்வாயில் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில், அலங்காநல்லூர் காவல் நிலையத்தினர் சடலத்தை கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: