பட்டாசு ஆலை விபத்து 5 பேர் பலி

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து….
5 பெண் தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாப பலி…..

விருதுநகர் :

விருதுநகர் எல்லை, மதுரை மாவட்டம் டி.கல்லுபட்டி அருகேயுள்ள செங்குளத்தில் இயங்கி வந்த, ராஜலட்சுமி பட்டாசு ஆலையில் இன்று மதியம் ஏற்பட்ட திடீர் விபத்தில், ஆலையில் பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்த அறைகளில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியது. இந்த திடீர் விபத்தில் ஆலையில் வேலை பார்த்துக் கொண்டு இருந்த 5 பெண்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். விருதுநகர், திருமங்கலம், சிவகாசியிலிருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்தில் வேறு யாரும் சிக்கியுள்ளார்களா என போலீசார் விசாரித்து வருகின்றனர். பட்டாசு ஆலை விபத்தில் 5 பெண்கள் உடல் கருகி இறந்த சம்பவம் அந்தப்பகுதியில் பலத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: