படம்

இராஜபாளையம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 6 காவல் நிலையத்தில் உள்ள வழக்குகள் குறைதீர்வு கூட்டம். 120 நபர்களுக்கு தீர்வு :

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சுற்றுவட்டார பகுதியில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டில் உள்ள 6 காவல் நிலையங்களில் வழக்குகள் குறைதீர் கூட்டம் மூலம் இன்று தீர்வு காணப்பட்டது .

தென் மண்டல ஐஜி முருகன் உத்தரவின் பெயரில் விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெருமாள் அறிவுறுத்தலின்படி இராஜபாளையம் துணை கண்காணிப்பாளர் நாக சங்கர் தலைமையில் உள்ள 6 காவல் நிலையங்களில் உள்ள நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காணும் கூ ட்டம் நடைபெற்றது 60 வழக்குகளில் 55 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு 5 வழக்கு களுக்கு உடன் பாடு ஏற்படவில்லை இந்த குறை தீர்வு கூட்டத்தில் 120 நபர்களுக்கு தீர்வு கிடைக்கப்பட்டுள்ளது இந்த கூட்டத்தில் வழக்குகளில் பாதிக்கப்பட்ட நபர்களும் அவர்கள் சார்ந்த வழக்கறிஞர்களும் கலந்துகொண்டு தீர்வு காணப்பட்டது என காவல்துறை துணை கண்காணிப்பாளர்
நாக சங்கர் தெரிவித்தார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: