மெத்தை தயார் செய்யும் ஆலையில் தீ விபத்து ..

இராஜபாளையம் அருகே சேத்தூர் பகுதியில் கழிவு பஞ்சு மெத்தை தயார் செய்யும் ஆலையில் தீ விபத்து ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பகுதியில் தளவாய்புரம் சாலையில் அமைந்துள்ள ராஜேஸ்வரி என்டர்பிரைசஸ் நிறுவனத்தில் நைட்டி கழிவு துணிகளை பயன்படுத்தி கழிவு துணிகள் மூலம் மெத்தையை தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர் .
வழக்கம்போல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது இன்று மிஷினில் ஏற்பட்ட மின்சார கசிவினால் தீ விபத்து ஏற்பட்டதில் ,50 ஆயிரம் மதிப்புள்ள கழிவுகள் அனைத்தும் எரிந்து நாசமானது . மேலும், ஐம்பதாயிரம் மதிப்புள்ள மிஷின்கள் சேதமடைந்துள்ளது .
இந்த தீ விபத்து குறித்து, இராஜபாளையம் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு அடுத்து, நிலைய அதிகாரி ஜெயராமன் தலைமையில் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர் .
இந்த தீ விபத்து குறித்து, சேத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: