மாநகராட்சி பணியாளர் ஆர்ப்பாட்டம்..

மதுரை மாநகராட்சி சுகாதாரம் மற்றும் பொறியியல் பிரிவில் பணிபுரியும் பணியாளர்கள் பணி நிரந்தரம், போனஸ், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்:

மதுரை

மதுரை மாநகராட்சியில் தினக்கூலி அடிப்படையில் தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட பணிகளில் மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர், அனைத்து தினக்கூலி தொழிலாளர்களுக்கும் 20 சதவீத தீபாவளி போனஸ் வழங்க வேண்டும், கொரோனோ பாதிக்கப்பட்டு உயிரிழந்த தொழிலாளருக்கு ஐம்பது லட்சமும், பாதிக்கப்பட்ட தொழிலாளருக்கு 2 இலட்சம் என நிவாரணம் வழங்க வேண்டும், 7வது ஊதியக்குழு பரிந்துரையின்படி 26 மாத நிலுவை தொகையை வழங்கிட வேண்டும், தினக்கூலி தூய்மை பணியாளர்களை நிரந்தரப்படுத்த உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: