தேவர் குருபூஜை ஆலோசனைக் கூட்டம்

சோழவந்தான் காவல் நிலையத்தில்
தேவர் குருபூஜை விழா
ஆலோசனை கூட்டம்

சோழவந்தான்:

வாடிப்பட்டி மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் காடுபட்டி காவல் நிலைய எல்லைக்குள் நடைபெறும் மருது பாண்டியர் மற்றும் தேவர் ஜெயந்தி விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது .
இதில் அந்த சமுதாய மக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் போது மைக் செட், கொட்டகை, பால்குடம், முளைப்பாரி, உள்ளிட்ட வெளிப்படையான மக்கள் கூடும் விஷயங்களுக்கு அனுமதி இல்லை என்றும் சமூக இடைவெளியை கடைப்பிடித்த தனித்தனியாக விழாக்களை நடத்திக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டது. மருதுபாண்டியர், மற்றும் முத்துராமலிங்கதேவர் ஜெயந்தியையொட்டி குரு பூஜையில் கலந்துகொள்ள செல்பவர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று செல்ல வேண்டுமெனவும் அனுமதி பெற்றவர்கள் ஒரு வாகனத்தில் 5 பேருக்கு மேல் செல்லக் கூடாது எனவும் விதிமுறை இருக்கிறது அதை கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. சோழவந்தான் காவல் நிலைய ஆய்வாளர் வசந்தி தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அறிவுறுத்தப்பட்ட விதிமுறைகளை முறையாக பின்பற்றி நடந்துகொள்வதாக அந்த சமூகத்தைச் சார்ந்தவர்கள் ஒப்புக் கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: