வாலிபர் கொலை..

திருப்பரங்குன்றம் அருகே வில்லாபுரத்தில் வாலிபரை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டிக் கொலை

பட்டப் பகலில் பயங்கரம்

மதுரை :

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரம் கணக்குப் பிள்ளை தெருவில் குணசேகரன் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது .

இந்த வீட்டில் போர் போடுவதற்காக திருப்புவனம் தாலுகா முக்குடி பகுதியில் இருந்து பாரதி, நாராயணன், வீரகுமார் ஆகிய 3 பேரும் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர் .

இந்நிலையில் இன்று காலை பத்தரை மணி அளவில் 5 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று குணசேகரன் வீட்டில் நுழைந்து அங்கு வேலை செய்து கொண்டிருந்த பாரதி (வயது 25) என்பவரை வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டது .சம்பவ இடத்திற்கு காவல் துணை ஆணையாளர் பழனிகுமார் காவல் உதவி ஆணையாளர் திருமலைக்குமார் மற்றும் காவல் ஆய்வாளர் மணிகண்டன் விரைந்து சென்று ஆய்வு செய்தனர். கொலை செய்து தப்பியோடிய கொலை குற்றவாளிகள் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட பாரதி மீது பல்வேறு கொலை வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடதக்கது. முன்விரேதம் காரணமாக கொலை நடைபெற்றதா என்பது குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர் .

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: