அரசு ஊழியர்கள் நவ. 26-ல் வேலை நிறுத்தம்…

மதுரை மாவட்டம் தமிழ்நாடு அரசு ஊழியர்களின் மாநில சங்கங்களில் பொதுகுழுவின் முடிவின் அடிப்படையில் வருகிற நவம்பர் 26 ஆம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தம்:

மதுரை

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஊழியர் சங்கங்களின் போராட்டக் குழு சார்பாக அதன் பொதுச்செயலாளர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தபோது :

தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு அரசு அனைத்து தொழிற்சங்கங்களின் போராட்ட குழுவின் சார்பிலும் இந்த நவம்பர் 26இல் நடைபெறக்கூடிய அந்த பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டிருக்கிறது

இந்தப் பொது வேலைநிறுத்தத்தின் யுடைய பிரதான கோரிக்கை சமூக பாதுகாப்பை இறுக்ககூடிய புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யப்பட வேண்டும்

அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் அதுபோல் இந்த குறுகிய காலத்தில் மத்திய மாநில அரசுகள் அரசு ஊழியர் மத்திய மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படி முடக்கம் சரண்டர் முடக்கம் பல்வேறு சலுகைகளைப் முறியடக்க பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சலுகைகளை உடனே வழங்கிட வேண்டும்

அதுபோல் இந்தியாவில் இருக்கக்கூடிய இன்சுரன்ஸ் பிஎஸ்என்எல் வங்கி போன்ற பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க மத்திய சர்க்கார் கைவிட வேண்டும்
.
அதேபோல ஊழியர்கள் கட்டாய ஓய்வை உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்

அதேபோல் இந்திய நாட்டில் இருக்கக்கூடிய தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தக் கூடிய அந்த சட்டத் திருத்தத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும

அது போல இந்த நாட்டினுடைய முக்கியமான இருக்கக்கூடிய விவசாயம் விவசாயம் சட்டம் அதற்கான மசோதாவை உடனடியாக கைவிட வேண்டும்

அதே போல புதிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும்

அதேபோல் அனைத்து மக்களும் ஏழை எளிய மக்களுக்கும் மாதத்துக்கு 7 ஆயிரத்தி ஐநூறு ரூபாய் வழங்க வேண்டும்

பொது விநியோக முறையை சீர்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அரசு ஊழியர்கள் அனைத்து தொழிற்சங்க போராட்டம் குழுவும் பங்கேற்கும் என முடிவு செய்யப்பட்டது

தொகுப்பூதியம் ஒப்பந்த தினக்கூலி சிறப்பு தர ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 26ந் தேதி நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: