நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு நிவாரணம்..பாஜக விவசாயி அணி..

*பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி சார்பாக சாத்தியார் டேம் பகுதியில் மக்காச்சோளம் பயிரிட்டு படைப்புழுக்களின் தாக்குதலால் நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு ரூபாய் 10 ஆயிரம் நஷ்டஈடு வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு*

மதுரை அக்:-20 மதுரை பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பாக மாநிலத் துணைத் தலைவர் முத்துராமன் ஜி தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
மதுரை மாவட்டம் சாத்தியார் அணை
பாசனத்துக்கு உட்பட்ட விவசாயப் பகுதிகளில் மக்காச்சோளம் பயிரிட்டு இருந்த நிலையில் படைப்புழுக்களின் தாக்குதலால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். ஏக்கருக்கு 20,000 செலவு செய்தும் படைப்புழுகளின் தாக்குதலை கட்டுப்படுத்த முடியாமல் மக்கள் தவித்து வரும் சூழலில் வேளாண் துறை அதிகாரிகள் ஏற்கனவே ஆய்வு மேற்கொண்டதின் அடிப்படையில் விவசாயிகளுக்கு ரூ 10,000 மானியம் வழங்க பரிந்துரை செய்ய வேண்டி கோரிக்கை மனு அளித்துள்ளனர். மேலும் போன வருடம் இதுபோல் புழு படை தாக்குதல் நடத்த போது மத்திய அரசும் மாநில அரசும் நூறு சதவீதம் மானியம் தரப்பட்டது ஆனால் போன ஆண்டைவிட இந்த ஆண்டு சுமார் 1/5 எக்டர் அதிகமா பயிர் சாகுபடி செய்து உள்ளார்கள் ஆனால் பேக்கன் சப்சிடியயோ 50/பர்சன்தான் சப்சிடி அறிவித்துள்ளார்கள் ஆகையால் கடந்த வருடத்தை விட இந்த வருடம் விவசாயிகள் அதிகம் பாதிப்பு உள்ளாகி உள்ளார்கள் இந்நிகழ்ச்சியில்
பா.ஜா.க.விவசாய அணி மாவட்டத் தலைவர் பூமிநாதன், மாவட்ட துணைத்தலைவர் சவுடி அம்பலம் மாவட்ட துணை தலைவர் ராமர், கார்த்திக் ,உட்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: