திமுக விழிப்புணர்வு பிரசாரம்

மின் கட்டண உயர்வைக் கண்டித்து திமுக துண்டு பிரசுர விநியோகம்

சோழவந்தான். ஜிலை. 24.

மின்சாரக் கட்டண உயர்வைக் கண்டித்து, மதுரை அருகேயுள்ள சோழவந்தான் மற்றும் முள்ளிப்பள்ளம் கிராமத்தில் திமுகவினர் துண்டு பிரசுரம் வழங்கி பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
சோழவந்தான் நகரில் நடைபெற்ற பிரசாரத்துக்கு, நகர திமுக செயலர் முனியாண்டி தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் ஷிதர் முன்னிலை வகித்தார். மாவட்ட பிரதிநிதி கண்ணன், ஒன்றிய பிரதிநிதி தவமணி, நிர்வாகிகள் ராஜா, ரவி ஆதிமூலம், முன்னாள் பேரூராட்சித் தலைவர் ஐயப்பன், முன்னாள் பேரூர் செயலர் சுப்புராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல், சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்திலும், திமுகவினர் ஊராட்சி துணைத் தலைவர் கேபிள் ராஜா தலைமையில் திமுகவினர் துண்டு பிரசுரங்களை வீடுகள் தோறும் வழங்கி பிரச்சாரம் செய்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: