கீழமாத்தூரில் வளர்ச்சிப் பணிகள் அமைச்சர ் ஆய்வு…

கீழமாத்தூர் ஊராட்சி யில் ரூ.17லட்சத்தில் புதிய சாலை பணி அமைச்சர் செல்லூர் ராஜு ஆய்வு:

சோழவந்தான்

மதுரை மாவட்டம் மேற்க்கு ஒன்றியம் திருப்பரங்குன்றம் யூனியன் கீழமாத்தூர் ஊராட்சி யில் ரூ17.50 லட்சத்தில் புதிய சாலை பணியினை கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே ராஜூ ஆய்வு செய்தார்.

கீழமாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிரீன் கார்டன் பகுதியில் அமைச்சர் செல்லூர் ராஜூ பரிந்துரையின் பேரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் ரூ 17.50லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணி துவங்கியது சிலரால்
பணி நிறுத்தப்பட்டது .
இதனால் ,பாதிப்புற்ற கிரீன் கார்டன் பகுதி மக்கள் அமைச்சர் செல்லூர் கே ராஜூ
விடம் சாலைப்பணி முடிக்ககோரினர். இப்பகுதி பொது மக்களின் கோரிக்கைக்கு ஏற்று
கீழமாத்தூர் பகுதியில் நடக்கும் சாலை பணியை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு செய்தார் .
திருப்பரங்குன்றம் யூனியன் அதிகாரிகளிடம் சாலைப் பணியை விரைவாக முடிக்க உத்தரவிட்டார் அமைச்சருடன் கீழமாத்தூர் ஊராட்சி தலைவர் ராஜாத்தி துரைப்
பாண்டி வார்டு உறுப்பினர் பஹிராபானு கிளை செயலாளர்கள் சாகுல் மைதீன் தங்கராஜ் சண்முகநாதன் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: