பெட்ரோல் ஊற்றி வாலிபர் எரிப்பா?

*மதுரையில் பொதுஇடத்தில் மது அருந்திக் கொண்டிருந்தவர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவத்தில் வாலிபர் – சிகிச்சை பலனின்றி பலி..!!!*

மதுரை:

மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் கூலபாண்டி கிராமத்தை சேர்ந்த காய்கறி வியாபாரியான மணிகண்டன் என்பவர் நேற்றைய தினம் திருப்பாலை பகுதியில் உள்ள அரசு மதுபான கடை அருகே தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திகொண்டிருந்துள்ளனர். இந்நிலையில் திடீரென அவர்களுக்கு ஏற்பட்ட தகராறில் மதுபோதையில் இருந்த மணிகண்டனை உடன் இருந்த நபர்கள் தாங்கள் மறைத்துவைத்திருந்த பெட்ரோலை மணிகண்டனை தாக்கி அவர் மீது ஊற்றி தீ பற்ற வைத்துள்ளனர். ,இதனையடுத்து தீயில் கருகிய நிலையில் கதறிய மணிகண்டனை அருகில் உள்ளவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த நிலையில் 90சதவித தீக்காயத்துடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு இன்று அதிகாலையில் மணிகண்டன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். ,இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக தல்லாகுளம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.,சில நாட்களுக்கு முன்பாக மணிகண்டனுக்கும் அதே பகுதியை சேர்ந்த அழகர் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அழகரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.,பொது இடத்தில் மதுபோதையில் நடைபெற்ற தகராறில் இளைஞரை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: