வைக்கோல் படப்புக்கு தீ வைப்பு…

இராஜபாளையம் அருகே தேவதானம் பகுதியில் உயர்மின் அழுத்த கம்பியில் கொக்கி போட்டு மற்றொரு மின்கம்பத்தில் சுற்றி மர்ம நபர்கள் அட்டூழியம். மேலும் அருகில் இருந்த கால்நடை தீவனம் வைக்கோல் மீது தீ வைத்ததால் அப்பகுதியில் பரபரப்பு.சேத்தூர் காவல் நிலைய போலீசார் விசாரணை.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தேவதானம் பகுதியில் ஆண்கள் இயற்கை உபாதை கழிக்க செல்லும் இடம் வழியாக செல்லும் உயர் மின் டிரான்ஸ்பார்ம் – இல் இருந்து கொக்கி போட்டு அதனை அருகில் இருந்த மின் கம்பத்தில் மர்மநபர்கள் யாரோ சுற்றி வைத்துள்ளனர்.

மேலும் அருகில் இருந்த பால் வியாபாரி வைரமுத்து என்பவரின் கால்நடை தீவனத்திற்கு பயன்படுத்தும் வைக்கோல் மீதும் மர்ம நபர்கள் தீ வைத்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

இது குறித்து தகவலறிந்த சேத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் பவுல் ஏசுதாஸ் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து உடனடியாக மின் துடிப்பை நிறுத்தி உயர் மின் அழுத்த கம்பியில் போட்டிருந்த கொக்கி இணைப்பை துண்டித்தனர். அதிர்ஷ்டவசமாக இச்சம்பவத்தில் எவ்வித உயிரிழப்பும் ஏற்படவில்லை.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சேத்தூர் காவல் நிலைய போலீசார் உயர் மின் அழுத்த கம்பியில் இருந்து கொக்கி போட்டு மின்சாரம் பாய்ச்சியும், கால்நடைத் தீவனத்திற்கு தீவைத்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகினனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: