செல்போன் சிக்னல் கிடைக்கவில்லை …

மதுரை சோழவந்தான் அருகே குருவித்துறை சித்தாதிபுரத்தில் செல்போன் சிக்னல் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி செல்போன் கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சோழவந்தான்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா சோழவந்தான் அருகே குருவித்துறை சித்தாதிபுரம் கிராமம் உள்ளது. பிரசித்தி பெற்ற குருவித்துறை குருபகவான் கோவில் இங்கே பழமை வாய்ந்தது .நெல் ,கரும்பு வாழை உள்ளிட்ட விவசாய பொருட்கள் அதிக அளவில் விளைவிக்கப் பட்டு வருகிறது. அரசு தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளது இங்கு சுமார் 9 வார்டுகள் உள்ளது 1500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அதிக அளவிலான பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு தற்போது ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. செல்போன் சிக்னல் கிடைக்காததால் பள்ளி, கல்லூரி மாணவர்களும் பொது மக்களும் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்களும் தொடர்பு கொள்ள முடியாமல் அவதியுற்று வருகின்றனர்.

இந்நிலையில், பல்வேறு முறை அரசுக்கு கோரிக்கை விடுத்தும் அரசு செவி சாய்க்க மறுக்கிறது. மதுரை மாவட்டத்தின் எல்லை பகுதியான இப்பகுதிக்கு அடுத்து திண்டுக்கல் மாவட்டம் ஆரம்பிக்கின்றது எனவே இதனை கருத்தில் கொண்டு உடனடியாக அரசு தொலைத்தொடர்பு நிறுவனம் அல்லது தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் மூலம் செல்போன் கோபுரத்தை அமைத்து இப்பகுதி பொது மக்களுக்கு செல்போன் சிக்னல் கிடைக்க வழிவகை செய்யுமாறு இப்பகுதி பொதுமக்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள் விவசாய பெருமக்கள் கேட்டுக் கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: