LatestNews
பிரதமரின் நல்ல செயல்பாடுகளுடன் எங்கள் க ூட்டணி…அமைச்சர்
அதிமுக கட்சியின் 49 ஆவது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மதுரை தவிட்டு சந்தை பகுதியில் அமைச்சர் செல்லூர் ராஜூ கொடி ஏற்றி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திமுக கூட்டணி வைத்துக்கொண்டு தான் எங்களுக்கு ,எதிராக செயல்படுகிறது, பிரதமரின் நல்ல செயல்பாடுகளுடன், எங்களோட கூட்டணிக் கட்சி செயல்படுகிறது, அவர்களின் செயல்பாடு எங்களுக்கு பிடித்துள்ளது, அதன் காரணமாக அவருடன் தோழமை கொண்டிருக்கிறோம். சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி மகன் மட்டும் தற்போது சிக்கியுள்ளார் இன்னும் பலர் சிக்க வேண்டியுள்ளது.
திமுகவினர் இந்தி எதிர்ப்பது போன்ற நாடகமாடுகிறார்கள், அவர்களைத் வைத்துள்ள பள்ளியில் ஹிந்தி பாடம் நடத்துகிறார்கள்.
2ஜி அலைக்கற்றை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
பலர் சிக்க இருக்கிறார்கள், எங்களுக்கு என சுய செல்வாக்கு இருக்கிறது தோழமைக் கட்சி செல்வாக்கையும் பயன்படுத்திக் கொள்கிறோம். நீட் தேர்வில் கிராமப்புற மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் ஆணித்தரமாக அதிமுக அரசு இருக்கிறது.
இதுவே திமுக அரசாக இருந்தால் நழுவி கொண்டு சென்றிருக்கும், மத்திய அரசுக்கு இணையான மாநில அரசின் பாடத் திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது, தேர்ச்சி விகிதம் பன்மடங்கு கூட இருக்கிறது வரும் ஆண்டுகளில், எங்களுக்கு போட்டி திமுக மட்டுமே கண்ணுக்கெட்டிய தூரம் வேறு எதிரிகள் இல்லை, நாங்கள் சொந்தக்காலில் நிற்க விரும்புகிறோம் அடுத்தவர்களை காலை நம்பி நிற்கவில்லை. திமுக கொள்ளையடிப்பதை கலையாக கொண்டுள்ளது. ஊழலுக்கு பெயர் பெற்ற கட்சி திமுக அதிமுக தொண்டர்களின் ஒவ்வொரு உயிர் அனுக்களிலும் சசிகலா இருப்பதாக கூறிய கேள்விக்கு, கருணாஸ் தான் கூறியிருக்கிறார் நாங்கள் கூறவில்லையே, என்றார்.
LatestNews
விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி:
மதுரையில் சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி, விழிப்புணர்வு பேரணியை, மாவட்ட ஆட்சியர் அன்பழகன், காவல் ஆணையர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
LatestNews
மாடு முட்டி ஒருவர் பலி

உலகப் புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – மாடு முட்டியதில் ஒருவர் பலி:
மதுரை
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா காணும் பொங்கல் நாளான நேற்று சீரும் சிறப்புமாக நடந்து முடிந்தது. தமிழக முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் பச்சை கொடியசைத்து துவக்கி வைத்தனர். இதில் 711 காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. ஒரு சுற்றுக்கு 75 நபர் வீதம் மொத்தம் 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். மாடுபிடி வீரர்களும் காளை உரிமையாளர்களும் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு மிக்க வீட்டு உபயோகப் பொருட்களை பரிசாக பெற்று சென்றனர். மேலும் ,இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 48 பேர் காயமடைந்தனர். இவர்களில் , 14 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில் , வாடிவாசல் வழியாக காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது. இந்த காளைகள் அனைத்தும் வெளியே வந்து முடிவில் காளைகளை படிப்பதற்கு அமைக்கப்பட்ட இடத்தில் காளை உதவியாளர்கள் நின்று அந்த காளைகளை பிடித்துச் சென்றனர். இப்படி காளைகளை பிடிக்க முயன்றபோது காளை தாக்கியதில் ஒரு நபருக்கு கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந் நிலையில், இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விசாரணையில் அவர் அலங்காநல்லூர் அருகே உள்ள காந்தி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகன் நவமணி (24) கட்டிட தொழிலாளி என்பதும் இவர் காளைக்கு உதவியாளராக வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
LatestNews
பத்திரிக்கையாளர் தாக்கு.

கோவை : கோவையில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த செய்தியாளரை தி.மு.க.,வினர் தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை குறிச்சி பகுதியில் நேற்று திமுக சார்பில் பொங்கல் விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுக., எம்.பி., ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டார். பொங்கல் விழா என்பதால் அந்த இடத்திற்கு செய்தியாளர் சந்திரசேகர் என்பவர் செய்தி சேகரிக்க சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த திமுக.,வினர் சந்திரசேகரை மிரட்டியதோடு புகைப்படம் எடுக்க கூடாது என்று கூறி அவரை தாக்கியுள்ளனர்.
-
LatestNews1 month ago
கோவை வள்ளல் சாந்தி கியர்ஸ் உரிமையாளர் இற ைவனடி சேர்ந்தார்.
-
LatestNews3 months ago
வீட்டுக்குள் புகுந்து உடும்பு பிடிபட்டத ு..
-
LatestNews3 months ago
மதுரை அருகே நந்தனார், வள்ளுவர் சிலை கண்ட ுபிடிப்பு…
-
LatestNews3 months ago
தேவர் சிலை அலங்கரிப்பு..
-
LatestNews4 months ago
பாலியல் பகுதியாக மாறி வரும் வாடிப்பட்டி?