வேன்மோதி லேப் டெக்னீஷியன் பலி

விபத்தில்
லேப் டெக்னீஷியன் பலி

வாடிப்பட்டி:

வாடிப்பட்டி அருகே மரத்தில் மாருதி வேன் மோதியதில் லேப் டெக்னீசியன் பலியானார்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை அடுத்த செல்வகுளம் காசிலிங்கம் மகன் நவீன் குமார் (23). இவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியன் ஆக வேலை பார்த்தார். இவர் மதுரைக்கு மாருதி ஆம்னி வேன் ஒன்றை ஓட்டிச் சென்றார் .வாடிப்பட்டி மயானம் அருகே வந்தபோது வேனின் இடது முன் பக்க டயர் வெடித்ததில் ரோட்டோரம் இருந்த மரத்தில் மோதியது. இதில் படுகாயமடைந்த நவீன்குமாரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நவீன்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: