முதல்வர் வேட்பாளர் எடப்பாடியாருக்கு யாற ும் மறுக்கவில்லை..எம்எல்ஏ

*முதல்வர் வேட்பாளர் எடப்பாடியார்
என்பதற்கு அதிமுக கூட்டணி கட்சியினர் யாரும் மறுப்பு தெரிவிக்கவில்லை:

ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேட்டி:

மதுரை

அதிமுகவின் 49-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி திருப்பரங்குன்றம் அருகே உள்ள மூலகரையில் 60 அடி உயரமுள்ள அதிமுக கொடியை வடக்கு சட்ட மன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஏற்றி வைத்து அன்னதான நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.

*தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது;

தமிழகம் முழுவதும் இன்று அதிமுகவின் 49 வது ஆண்டு துவக்க விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆட்சி பீடத்தில் இருக்கும் போதே எம் ஜி ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. பொன்விழா ஆண்டை தற்போதைய முதல்வரே 2021 ஆம் ஆண்டு ஆட்சியிலேயே நடத்துவார்.

*கூட்டணி சார்பாக முதல்வர் வேட்பாளராக
எடப்பாடியார்
என்று அறிவித்ததற்கு பிரதமர் வாழ்த்தோ, கருத்தோ தெரிவிக்காதது குறித்த கேள்விக்கு*

அதிமுக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி கே.
பழனிச்சாமி என்பதை கூட்டணி கட்சியினர் யாரும் மறுப்பு தெரிவிக்கவில்லை.

கூட்டணிக்கு தலைமை எடப்பாடி தான், நாளைய தமிழக முதல்வரும் அவரே தான் என்று கூறினார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: