Connect with us

LatestNews

சிமெண்டு கலவை இயந்திரம் ஆற்றுக்குள் விழ ுந்து ஒருவர் பலி

Published

on

*மதுரை ஆரப்பாளையம் அருகே நடைபெற்ற ஸ்மார்ட் சிட்டி திட்ட பணியில் சிமெண்டு கலவை இயந்திர லாரியுடன் 2 பேர் ஆற்றுக்குள் விழுந்து விபத்து : ஒருவர் பலி*

மதுரை, திண்டுக்கல் மெயின் ரோடு வைகை ஆற்றின் இரு கரைகளிலும் சாலை அமைக்கும் பணி ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் மூலம் நடைபெற்று வருகிறது.

இதில் பெத்தானியாபுரம் பகுதியை ஒட்டிய வைகை ஆற்று பாலம் பகுதியில் கீழ்ப்பகுதியில் சாலைகள் அமைக்கும் பணி கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது.

தற்போது அங்கு சாலைகள் அமைப்பதற்கும் காங்கிரீட் கலவை எந்திரத்துடன் கூடிய லாரிமூலம் கலவை கொண்டு வரப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று மாலை 5.45 மணி அளவில் கான்கிரீட் கலவை கொண்டுவந்த லாரி ஒன்று திடீரென்று அங்கு தோண்டப்பட்டு இருந்த 30 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் லாரி டிரைவர் மானாமதுரை பகுதியை சேர்ந்த தாளமுத்து, விருதுநகர் மாவட்டம் ஆத்தூர் அருகே வெல்லூரை சேர்ந்த மாரீஸ்வரன், ஆகிய இருவரும் லாரிக்கு அடியில் சிக்கி உயிருக்கு போராடினார் அவர்களை பொதுமக்கள் மற்றும் மீட்புக்குழுவினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து மீட்டனர் இதில் மாரீஸ்வரன் சம்பவம் நடந்த இடத்திலேயே இறந்து விட்டார். தாளமுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ராஜாஜி மட்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சிமெண்ட் கலவை காங்கிரிட் லாரியை கிரேன் மூலம் தூக்கும் பணி நடைபெறுகிறது.

இந்த சம்பவம் குறித்து கரிமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading
Advertisement
Click to comment

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

LatestNews

கிராம மக்கள் முற்றுகை போராட்டம்..

Published

on

ஆட்சியர் அலுவலக முன்பு முற்றுகை போராட்டம்:

மதுரை

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட
கொம்பாரி கிராம ஊராட்சியில் உள்ள கீழக் கண்மாய் மற்றும் மேலக் கண்மாய்களுக்கு நிலையூர் – கம்பிகுடி கால்வாயிலிருந்து தொட்டியபட்டி பிரிவிலுள்ள நெடுமதுரை கடல் வழியாக மேற்சொன்ன கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்க ஆவணம் செய்யும்படி வேண்டுகோள் விடுத்தும் , தண்ணீர் திறந்து விடக் கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்த திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஆசிக்கை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
எனவே அவரை மீண்டும் பணியிலமர்த்தக் கோரியும் கொம்பாரி
ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில்
கொம்பாரி ஊர் பொதுமக்கள் சுமார் 450 பேர் தங்களது குடும்ப அட்டையை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்பதாக கூறி
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுக்கை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.கி

Continue Reading

LatestNews

திடீரென வீடு இடிந்து விழுந்தது…

Published

on

மதுரை தெற்கு வாசல் மீனாட்சி டாக்கீஸ் அருகே வீடு ஒன்று திடீரென இடிந்தது.
தகவல் கிடைத்ததும், மதுரை தீயணைப்பு துறையினர் விரைந்துள்ளனர்.

Continue Reading

LatestNews

ஜெயலலிதா கோயில் கும்பாபிஷேகம்..

Published

on

ஜெ.கோயில் கும்பாபிசேகத்திற்கு கிராமம் கிராமாக அமைச்சர் உதயகுமார் அழைப்பு

திருமங்கலம் :

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி. குன்னத்தூரில்ஜெ.பேரவை சார்பில் அமைச்சர் உதயகுமார் ஏற்பாட்டில் அம்மா கோயில் என்ற பெயரில் அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெ.க்கு கோயில் கட்டப்படுகிறது. இதில் இருவருக்கும் 8 அடி உயர வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கான பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், ஜன.30 ல் கும்பாபிசேகம் நடக்க உள்ளது.
இந்த கும்பாபிசேகத்திற்கு முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த நிகழ்ச்சிக்காக திருமங்கலம் தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் அமைச்சர் உதயகுமார் நேரில் சென்று கும்பாபிசேகத்தில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பிதழ் கொடுத்தார்.

Continue Reading

சினிமா..

Follow me on Twitter

Dhinasari News

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்!

நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

வயலுக்கு சென்ற பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்!

மூவரும் அவரின் வாயில் அங்கிருந்த ஒரு துணியை வைத்து அடைத்து ,ஒரு மரத்தில் கட்டி வைத்து பலாத்காரம் செய்துள்ளார்கள் வயலுக்கு சென்ற பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்! முதலில்… [...]

மசாஜ் என்ற பெயரில் நடந்த மசா..! ரைடில் சிக்கிய  ஆயுர்வேத மசாஜ் சென்டர்!

இந்த ஆயுர்வேத மையத்தை கேரளா மாநிலம் மலபுரத்தை சேர்ந்த முகமது உஸ்மான் மற்றும் மகேஷ் ஆகிய இருவரும் சேர்ந்து நடத்தி வந்தார்கள் . மசாஜ் என்ற பெயரில்… [...]

சுத்தானந்த பாரதி பெயரில்… இந்திய மொழிகள் ஆராய்ச்சி, மொழிபெயர்ப்பு பல்கலை., அமைய வேண்டும்!

அது மொழி ஆய்வியல் மாணவர்களுக்கும் தமிழகத்துக்கும் பெரும் பலமாகவும் மொழிகளுக்கு இடையேயான ஒரு பாலமாகவும் அமையும். சுத்தானந்த பாரதி பெயரில்… இந்திய மொழிகள் ஆராய்ச்சி, மொழிபெயர்ப்பு பல்கலை.,… [...]

பாதுகாப்பான ஜல்லிக்கட்டு! அரவிந்த் சாமி முன் வைக்கும் யோசனை!

போட்டிகளின் போது ஏற்படுகின்ற உயிரிழப்புகள் தடுக்க முடியாதவையாகின்றன. பாதுகாப்பான ஜல்லிக்கட்டு! அரவிந்த் சாமி முன் வைக்கும் யோசனை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

Follow Us

ஆன்மிகம்…

Trending

Copyright © 2020 Daily Tamil News Developed and Maintained by SSS Media, Chennai TN, IN

%d bloggers like this: