சேவல் சண்டை: 13 இரு சக்கரவாகனம் பறிமுதல்..

அலங்காநல்லூர் அருகே 13 இரு சக்கர வாகனம், ஒரு சேவல் பறிமுதல் போலீஸார் நடவடிக்கை:

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே குட்டிமேய்க்கப்பட்டி கீழக்கரை சுடுகாட்டு பகுதியில் நின்று கொண்டிருந்த 13 இரு சக்கர வாகனம் மற்றும் சேவலையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
குட்டிமேய்க்கப்பட்டி சுடுகாட்டு பகுதியில் சேவல் சண்டை நடத்துவதாக, அலங்காநல்லூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், போலீஸார் சென்று பார்த்தபோது, சேவல் சண்டையில் ஈடுபட்டவர்கள் 13 இரு சக்கரவாகனங்கள் மற்றும் ஒரு சேவலையும் விட்டு, விட்டு தலைமறைவாகி விட்டனர்.
இது குறித்து அலங்காநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: