ஆவின் பால் விழிப்புணர்வு பிரச்சாரம்

சிவகாசியில் ஆவின் பால் பொருட்கள் விழிப்புணர்வு பிரச்சாரம்…..
அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கொடியசைத்து துவக்கி வைத்தார்……

சிவகாசி :

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஆவின் பால் பொருட்களின் நன்மைகள் குறித்து, பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காக, விழிப்பணர்வு வாகனப் பிரச்சாரம் துவக்கப்பட்டது. சிவகாசி பேருந்து நிலையத்தில் பிரச்சார வாகனத்தை, அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கொடியசைத்து துவக்கி வைத்தார். ஆவின் பால் விற்பனையை அதிகப்படுத்தவும், ஆவின் பால் மூலம் தயாரிக்கப்படும் பொருட்கள் குறித்தும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட உள்ளதாக ஆவின் அதிகாரிகள் கூறினர். நிகழ்ச்சியில் திருவில்லிபுத்தூர் எம்எல்ஏ சந்திரபிரபா, விருதுநகர் மாவட்ட பால் வளத்தலைவர் கண்ணன், ஆவின் பொது மேலாளர் ராஜாகுமார் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: