ஆசிரியையிடம் செயின் பறிப்பு

விருதுநகர் ஓவிய ஆசிரியையிடம் 5 பவுன் தாலி செயின் பறிப்பு…..
டூவிலரில் வந்த மர்ம ஆசாமிகளுக்கு போலீசார் வலை……

விருதுநகர் :

விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் வேலுமணி (56). இவர் திருமங்கலம் அரசுப்பள்ளியில் ஓவிய ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இன்று காலை அருப்புக்கோட்டை சாலை, மேம்பாலம் அருகே கருமாதிமடம் பகுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இவரின் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த, இரண்டு மர்ம ஆசாமிகள் கண்ணிமைக்கும் நேரத்தில் வேலுமணி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலி சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர். அதிர்ச்சியடைந்த ஆசிரியை வேலுமணி, நகை பறிப்பு குறித்து விருதுநகர் பஜார் போலீசில் புகார் கொடுத்தார். தாலிச்சங்கிலியை அறுத்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: