போலீஸாரை கண்டித்து பெண் தனியாக சாலை மறிய ல்..

இராஜபாளையம் அம்பேத்கர் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை: கண்டுகொள்ளாத காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கக் கோரி தனி ஒரு பெண் சாலையில் செங்கல்களை அடுக்கி சாலை மறியல்:

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அய்யனார் கோவில் செல்லும் சாலையில் அம்பேத்கர் நகர் உள்ளது. இந்தப்பகுதி எதிரே தனியார் கல்லூரி மற்றும் 2 ஆங்கில வழி கல்வி தனியார் பள்ளிகள், கல்லூரிகளும் உள்ளன.

இந்நிலையில் , இந்த பகுதியில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுவதாகவும், இதனால், கல்லூரி மாணவர்கள் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் வாழ்க்கை தொலைத்து போதைக்கு அடிமையாகி உள்ளதாக கூறி அப்பகுதியை சேர்ந்த ரவி என்பவரது மனைவி செல்வராணி (வயது 35) செங்கல்களை சாலையில் அடிக்கி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.
மறியலில் ஈடுபட்ட செல்வராணி கூறும்போது, மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை உட்பட அனைவரிடமும் புகார் அளித்துள்ளேன் . ஆனால், இதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்காத நிலையில் இன்று அய்யனார் கோவில் செல்லும் சாலையில் சாலைகளில் செங்கல்களை அடுக்கி தனி ஒரு பெண்ணாக போராட்டத்தில் ஈடுபட்டார். உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க போவதாகவும் தெரிவித்தார்.

தகவல் அறிந்து வந்த வடக்கு காவல் நிலைய போலீசார் அந்தப் பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தி பெண்ணை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். மேலும், மறியல் ஈடுபட்ட பெண்ணிடம் காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில் இப் பகுதியில் கஞ்சா விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: