புதுக்கோட்டையில் பிரதோஷ விழா..

புதுகை மாவட்டத்தில் பிரதோஷ
வழிபாடு நடந்தது.
புதுக்கோட்டை:புதுக்கோட்டைமாவட்டத்தில் ஆலயங்களில்பிரதோஷ வழிபாடுநடைபெற்றது. திருவரங்குளம் ஸ்ரீ பெரியநாயகி அம்பாள்உடனுறை ஸ்ரீ அரங்குளநாதர் ஆலயத்தில் புரட்டாசி மாத பிரதோஷ நாளை முன்னிட்டு சிவன் சன்னதியில் உள்ள நந்தி பகவானுக்குஅபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. சிவபெருமான் அம்பாளுக்கு தீபாராதனை காட்டப்பட்டு நந்தி பெருமானுக்கு மகா தீபம் காட்டப்பட்டது. இதேபோல் திருக்கட்டளை ஸ்ரீசோமசுந்தரேஸ்வரர் மங்கள நாயகி அம்பாள் கோவில்,திருமலை ராய சமுத்திரம் ஸ்ரீகதிர்காம ஈஸ்வரி காமேஸ்வரர் சுவாமி கோவில் ,புதுகைஸ்ரீசாந்தநாதர்,திருக்கோகர்ணம்ஸ்ரீகோகர்ணேஸ்வர்,திருவேங்கைவாசல்ஸ்ரீவியாக்கியபுரீஸ்வர்ஆகிய ஆலயங்களில் பிரதோஷவழிபாடு நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: