சதுரகிரி மலையில் பக்தர்களுக்கு அனுமதி:

சதுரகிரி மகாலிங்க மலையில் பக்தர்கள் கூட்டம்…..
தேய்பிறை பிரதோஷம், அமாவாசை வழிபாட்டிற்காக அனுமதி……

திருவில்லிபுத்தூர் :

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை. மலை மேல் உள்ள சுந்தரமகாலிங்கம் சுவாமியை தரிசிக்க தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். மலைக்குச் செல்ல பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மட்டுமே வனத்துறையினர் அனுமதி தருவார்கள். இன்று புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, அதிகாலையிலிருந்தே ஏராளமான பக்தர்கள் வனத்துறை அனுமதிக்காக, நுழைவு வாயிலின் முன்பு காத்திருந்தனர். காலை 7 மணியிலிருந்து பக்தர்கள் மலைக்குச் செல்ல வனத்துறையினர் அனுமதி வழங்கினர். மலைக்கு மேலே செல்லும் பக்தர்கள் உடல் வெப்ப பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். தற்போது மலைப்பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதால், மலை மேல் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி கிடையாது. மேலும் கன மழை பெய்தால் பக்தர்கள் மலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என ஏற்கனவே கோவில் நிர்வாகிகள், அதிகாரிகள், வனத்துறையினர் கூறியுள்ளனர். மேலும் கோவிலுக்குச் செல்லும் வழியில் உள்ள நீரோடைகளில் பக்தர்கள் குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. காலையிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் பாதுகாப்பிற்காக மலையடிவாரப்பகுதியில் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். வரும் 17ம் தேதி வரை மகாலிங்கமலை, சுந்தரமகாலிங்கம் சுவாமியை பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: