Connect with us

LatestNews

அதிமுக தேர்தல் களத்தில் முதலில் உள்ளது.. அமைச்சர்

Published

on

மதுரை :

அதிமுக வழிகாட்டுதல் குழுவை அமைத்த பிறகு திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைத்து உள்ளது, அதிமுக தேர்தல் களத்தில் முதலில் உள்ளது, தேர்தல் அறிக்கை என்பது அக்கட்சியின் பொக்கிஷம், தேர்தல் அறிக்கை மக்களை ஈர்க்கும் அதனால் அது ரகசியம் காக்கப்படுகிறது என வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் மதுரையில் பேட்டி.

உலகளாவிய தகவல் தொழில்நுட்பத்துறையின் வளர்ச்சி குறித்து உலகளாவிய தொழில்நுட்ப மாநாடு 2020 இணைய வழியில் 14 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை நடைபெறுகிறது, இம்மாநாட்டை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையிலிருந்து
தொடங்கி வைத்தார், மாநாட்டை தொடங்கி வைத்த பின் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் "உலகளாவிய அளவில் தகவல் தொழில்நுட்பத்துறை மாநாடு 5 நாட்கள் நடைபெறுகிறது, தகவல் தொழில்நுட்பத்துறை மாநாடு ஒரு மைல் கல்லாக அமையும், தமிழக அரசு நிர்வாகத்தை முழுமையாக டிஜிட்டல் முறையில் கொண்டு வர நடவடிக்கை, தமிழகத்தில் தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு வருகிறது, பண்டிகை காலங்களை மக்கள் மிக கவனமாக கையால வேண்டும், வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன, மருந்து கண்டுபிடிக்கும் வரையில் கொரைனா கொடிய நோயாக உள்ளது, கொரைனாவை எதிர் கொள்வதில் விவேகம் மிக முக்கியம், தகவல் தொழில்நுட்பத்துறையில் உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20 ஆம் தேதி தொடங்குவதாக தகவல், 38 மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது, வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழகம் தயாராக உள்ளது, தென் மேற்கு பருவமழை கூடுதலாக 24 சதவீதம் கிடைத்துள்ளது, கூடுதல் மழையால் விவசாய பணிகள் நடைபெறுகிறது, நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவில் நல்லதே நடக்கும், நடிகை குஷ்பூ பாஜகவில் சேர்ந்த காரணம் குறித்து அவரே சொல்லி விட்டார், கூட்டணிக்கு பலரும் வருவது கூட்டணிக்கு பலமாக அமையும், வடகிழக்கு பருவமழை நீரை சேமிக்க நீர் நிலைகள் தயாராக வைக்கப்பட்டுள்ளது, வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மண்டல அளவில் குழுக்கள் அமைப்பு, தென் மாவட்டங்களில் மிதமான மழையும், வட மாவட்டங்களில் கூடுதலாக மழை இருக்கும், கடலோர மாவட்டங்கள், மலை பிரதேசங்களில் கூடுதல் கவனம் செலுத்துகிறது, அதிமுக வழிகாட்டுதல் குழுவை அமைத்த பிறகு திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைத்து உள்ளது, அதிமுக தேர்தல் களத்தில் முதலில் உள்ளது, தேர்தல் அறிக்கை என்பது அக்கட்சியின் பொக்கிஷம், தேர்தல் அறிக்கை மக்களை ஈர்க்கும், துணை வேந்தர் சூரப்பா ஜனநாயக ரீதியில் மரபு சார்ந்த விஷயங்களை பின்பற்ற வேண்டும், தேர்தல் காலங்களில் அனைத்து விஷயங்கள் சர்சையாக்கபடுகிறது, உரிமைகள் பாதிக்காத வண்ணம் வளர்ச்சியை பெற வேண்டும்" என கூறினார்

Continue Reading
Advertisement
Click to comment

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

LatestNews

அரசு சார்பில் கொரோனா நிதி…

Published

on

திருப்பரங்குன்றத்தில் உள்ள ஒரு நியாய விலை கடையில்தமிழக அரசின் சார்பில் கொரோனா நிவாரண நிதியை கோ.தளபதி எம்.எல்.ஏ.வழங்கியபோது எடுத்த படம். அருகில் தி.மு.க. பகுதி செயலாளர் கிருஷ்ண பாண்டி, துணை செயலாளர் எம்.ஆர்.பி.ஆறுமுகம் உள்பட பலர் உள்ளனர்

Continue Reading

LatestNews

வெளி மாநிலங்களிலிருந்து ஆக்சிஜன்..அமைச்ச ர்

Published

on

துபாய், சிங்கப்பூர், டெல்லி, ஒடிசா மாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் இறக்குமதி செய்ய திட்டமிட்டு வருகிறோம் -நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மதுரையில் பேட்டி*

மதுரையில் கொரோனா சிகிச்சைக்கு சித்த மருத்துவ மையம் திறப்பு:

மதுரை

மதுரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், மருத்துவமனை, சிகிச்சை மையங்களின் நிலை குறித்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
திருப்பாலை பகுதியில் உள்ள யாதவா மகளிர் கல்லூரியில் 108 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டு உள்ள சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை திறந்து வைத்து ஆய்வு செய்தனர்.
அப்போது, சட்டமன்ற உறுப்பினர்கள் பூமிநாதன், வெங்கடேஷ் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சந்திரமோகன், ஆட்சியர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் விசாகன் ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த
வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி பேசுகையில்,
மதுரையில் முதல் சித்தா சிகிச்சை மையம் துவங்கப்பட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று தீவிரமாக பரவிக் கொண்டிருக்கிறது. போர்க்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
விரைவில் மதுரையில் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்றார்.
நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில்,
மதுரையில் மிகவும் இக்கட்டான சூழல் உள்ளது.
கடந்த ஆண்டை விட இந்தாண்டு பாதிப்பு அளவு அதிகமாக உள்ளது.
அரசு உருவாகி ஒரு வாரம் கூட ஆகவில்லை என்றாலும் மிக விரைவாக செயல்பட்டு வருகிறோம்.
அரசு மருத்துவமனை அனைத்தும் நிரம்பி விட்டது.
எனவே, ஒய்வு பெற்ற மருத்துவர்கள், இறுதி ஆண்டு மருத்துவ மாணவர்கள், வெளிநாட்டு மருத்துவர்கள் ஆகியோரை இங்கு சிகிச்சை பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
துபாய், சிங்கப்பூர், டெல்லி, ஒடிசா மாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் இறக்குமதி செய்ய திட்டமிட்டு வருகிறோம்.
மக்கள் அவர்களின் வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டால் மட்டுமே கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
தேர்தல் காலத்தில் ஒரு நாள் கூட நான் மாஸ்க் இல்லாமல் வெளியே சென்றதில்லை.
அரசு எவ்வளவு முயன்றாலும்,
மக்கள் உதவினால் மட்டுமே இதை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
ஆக்சிஜன் படுக்கைகள், மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளது.
ஓரிரு நாளைக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்கும். ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் விரைவில் கிடைக்கும் என நம்புகிறோம் என்றார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டு உள்ள கட்டளை மையத்தை ஆய்வு செய்தனர்.
பின்னர், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகிகள், பிரதிநிதிகள் உடன் ஆலோசனை செய்து வருகின்றனர்.

Continue Reading

LatestNews

கொரோனா நிவாரண நிதி வழங்குதல்

Published

on

திருப்பரங்குன்றம் அருகே உள்ள நிலையூர் நியாய விலை கடையில் தமிழக அரசின் சார்பில் கொரோனா நிவாரண நிதியை கூத்தியார்குண்டு கூட்டுறவு சங்கத் தலைவர் நிலையூர் முருகன் வழங்கியபோது எடுத்த படம்

Continue Reading

சினிமா..

Follow me on Twitter

Dhinasari News

நெகடிவ்.. ஆனா பாசிட்டிவ்..  வெளியே போனா ஆபத்து!

இரண்டாம் அலையில், யாரிடம் தொற்று இருக்கும் என்று, யாருக்கும் தெரியாது. நெகடிவ்.. ஆனா பாசிட்டிவ்.. வெளியே போனா ஆபத்து! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

தரக்குறைவாய் மெஸேஜ் அனுப்பிய நபர்! காட்டமான சௌந்தர்யா!

இப்படியான மெசேஜ்களை அனுப்புபவர்களுக்கு அவ்வளவு தைரியம் இருக்கும் பொழுது, அவ்வளவு துணிச்சல் இருக்கும் பொழுது, இதைப் பற்றி பேசி சமூக வலைதலங்களில் கருத்துக்களை நீங்களும் தயங்காமல் பதிவிட… [...]

கொரோனா: தயாரிப்பாளர் கலைச்செல்வன் மரணம்

தீவிர சிகிச்சையில் இருந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். கொரோனா: தயாரிப்பாளர் கலைச்செல்வன் மரணம் முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

கெல்லீஸ் முதல் தரமணி வரை.. மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை: எல் அண்ட் டி நிறுவனம் தேர்வு!

அடுத்த 36 மாதங்களில் முடிக்க உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. கெல்லீஸ் முதல் தரமணி வரை.. மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை: எல் அண்ட் டி நிறுவனம் தேர்வு!… [...]

உலகின் தலைசிறந்த தர்மம்!

நாய் ஒன்று அவர் எதிரில் எலும்பும் தோலுமாக வந்து நின்றது. உலகின் தலைசிறந்த தர்மம்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

Follow Us

ஆன்மிகம்…

Trending

Copyright © 2020 Daily Tamil News Developed and Maintained by SSS Media, Chennai TN, IN

%d bloggers like this: