ரெடிமேட் ஆடை குடோனில் தீ விபத்து..

சிவகாசியில் ரெடிமேட் ஆடைகள் கடை, குடோனில் தீ விபத்து…..
பல லட்சம் மதிப்புள்ள ஆடைகள் எரிந்து சேதம்…..

சிவகாசி :

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பேருந்து நிலையம் அருகே நடந்த தீ விபத்தில், ரெடிமேட் ஆடைகள் கடை, குடோன் மற்றும் மீட்டிங் ஹால் எரிந்து சேதமானது.
திருச்சி புத்தாநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ஷேக்தாவீது (45). இவர் சிவகாசி பேருந்து நிலையம் அருகே ரெடிமேட் துணிக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். கடைக்கு தேவையான ஆடைகளை இருப்பு வைப்பதற்காக, கடை அருகிலேயே தகர செட் அமைத்திருந்தார். ரேடிமேட் துணிக் கடையில் புத்தாநத்தத்தைச் சேர்ந்த கமாலுதீன் (68), முகம்மதுசித்திக் (60), ஷாகில்ஹமீது (21) வேலை பார்த்து வருகின்றனர். குடோனில் மதிய உணவு தயாரித்துக் கொண்டிருந்த போது அருகில் இருந்த துணி பண்டல்களில் தீப்பிடித்து எரியத் துவங்கியது. குடோனில் இருந்தவர்கள் தப்பியோடினர். விபத்து கேள்விப்பட்ட சிவகாசி தீயணைப்புத்துறையினர், நிலைய அதிகாரி பாலமுருகன் தலைமையில் விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் காம்ளக்ஸ்சில் இருந்த மீட்டிங் ஹாலும் கடுமையான சேதமடைந்தது. அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமானது. துணிக்கடை மற்றும் குடோனில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள ஆடைகள் தீயில் எரிந்து சேதமானது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் அருகிலிருந்த நகை கடைகள் விபத்திலிருந்து தப்பியது. விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: