சதுரகிரி மலைக்கு பக்தர்கள் அனுமதி..

சதுரகிரி மலைக்கு நாளை முதல், 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி…..
புரட்டாசி மாத பிரதோஷம், அமாவாசை பூஜைகளுக்கான ஏற்பாடுகள்……

திருவில்லிபுத்தூர் :

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சிமலையில் உள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில். அடர்ந்த வனப்பகுதியில் உள்ள கோவிலுக்கு, மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மட்டுமே கோவிலுக்கு செல்ல முடியும் என்பதால், இந்த நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். நாளை புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷம், அடுத்து சிவராத்திரி மற்றும் அமாவாசை பூஜைகளுக்காக, வரும் சனிக்கிழமை வரை நான்கு நாட்கள் மலை மேல் உள்ள சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் சுவாமி கோவிலுக்கு, தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் விஸ்வநாத் கூறியுள்ளனர். மேலும் கோவிலுக்கு செல்லும் அனைத்து பக்தர்களும், உடல் வெப்ப பரிசோதனைக்கு பின்னரே மலை மீது செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள். தற்போது வெப்பசலனம் மற்றும் புயல் காரணமாக மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருகிறது. மலைப்பகுதியில் பெரிய அளவில் மழை பெய்தால், பக்தர்கள் மலை மேல் செல்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் கோவில் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: