இணையவழி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் க ூட்டம்.

*கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இணையவழியில் விவசாயிகளுக்கு குறைதீர் கூட்டம்:

திருப்பரங்குன்றம்

மதுரை மாவட்டம்
திருப்பரங்குன்றம் தாலுகா பகுயில் விவசாயிகளின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் கூகுள் மீட் மொபைல் ஆஃப் மூலமாக விவசாயிகளை இணைத்து ஆன்லைனில் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில்
கொரோனா தொற்று காரணமாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டத்தை விவசாயிகளுக்கு சம்பந்தப்பட்ட வேளாண்மை அலுவலகத்திலேயே விவசாயிகள் தெரிவிக்கலாம் என, மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து ,
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாதந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கொரோனா தொற்று காரணமாக 7 மாதங்கள் கழித்து இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் திருப்பரங்குன்றம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயத்திற்காக நீர்வரத்து அதிகரிக்க நிலையூர் கம்மாயில் மடை அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இந்தக் கூட்டத்தில் வேளாண்துறை அலுவலக அதிகாரிகள், மேற்கு, தெற்கு ஒன்றியங்களிருந்தும் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் திருப்பரங்குன்றம் சுற்றுவட்டார விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: